அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவுக்கு எதிரான போரில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நாடு... அடுத்த வாரம் முதல் பள்ளிகள் திறப்பு -


கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்பத்திய தென்கொரியா, அடுத்த வாரம் முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகள் உட்பட பலவேறு நாடுகள் திணறி வருகின்றன.
நாட்டில் பத்து பேருக்கு பரவினாலே, அது அப்படிய ஒரு மனிதச்சங்கிலி போன்று, அடுத்தடுத்து 100, 1000 மற்றும் 1000 என உயர்ந்து கொண்டே போய் கொண்டிருக்கிறது.

இதனாலே இதன் ஆரம்பம் எங்குள்ளது, முடிவு எங்குள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாமல், பல்வேறு நாடுகள் திணறி வருகின்றன.


Daegu, South Korea. (Im Hwa-young / Yonhap )

அப்படி இருக்கையில், இந்த நாடுகளுக்கு எல்லாம் கொரோனா விஷயத்தில், அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதில், தென்கொரியா எடுத்துகாட்டாக உள்ளது.

அந்நாட்டில் தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களாக அங்கு பாதிப்பு குறைந்து வருகிறகிறது.
புதிதாக தற்போது மூன்று பேருக்கு மட்டுமே அங்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்களுடைய கடுமையான கட்டுப்பாடுகள், அதிவேக பரிசோதனை முறையால தென்கொரியா இப்போது கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது.


Getty Images

இதனால் கொரோனாவிற்கு எதிரான போரில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நாடாக தென்கொரியா பார்க்கப்படுகிறது.
வரும், 13-ஆம் திகதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே, பேஸ்பால் விளையாட்டு போட்டிகள் துவங்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் மக்கள் சகஜநிலைக்கு திரும்பிவிடுவர் என்று கூறப்படுகிறது.
மற்றொரு ஆசிய நாடான சீனாவிலும், தொடர்ந்து மூன்றாவது வாரமாக, புதிய பலி ஏதும் ஏற்படவில்லை. அங்கு புதிதாக, ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெறும், 400 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், ஹாங்காங், தைவான், வியட்நாம், தாய்லாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றிலும், வைரஸ் பாதிப்பு மட்டுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,
கொரோனாவுக்கு எதிரான போரில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நாடு... அடுத்த வாரம் முதல் பள்ளிகள் திறப்பு - Reviewed by Author on May 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.