அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,200 ஆவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்......!!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (20) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தம் முடிவடைந்து வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யுத்த காலங்களில் வெள்ளை வான்களில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடைய உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனிப்பு போராட்டமானது நேற்று (20) 1,200 ஆவது நாளாகவும் தொடர்கின்றது...

இந்நிலையில் தமது ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த போதும் இதற்கான எந்த வித தீர்வுகளும் இல்லாத நிலையில் தங்களுடைய தொடர் போராட்டத்தை 1,200 வது நாளாக முன்னெடுத்து வருகின்ற உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் இடம்பெறுகின்ற கொட்டகைக்கு முன்பாக நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளி பேணி முகக்கவசம் அணிந்து தங்களுடைய நியாயமான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்......

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த உறவுகள் கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணை வேண்டும். அப்பா எங்கே என்று கேட்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் பதில் என்ன? போரின் முடிவில் கையளித்தோர் போரில் இறந்தனர் என்பது பொய் இல்லையா? சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் எங்கே எங்கே உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும். வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்..



முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,200 ஆவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்......!!! Reviewed by Author on June 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.