அண்மைய செய்திகள்

recent
-

வெற்றியின் பங்காளிகளாக தமிழ் மக்களும் மாறவேண்டும் - காதர் மஸ்தான்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேக்கொண்ட முன்னால் பிரதிஅமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் அவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 28.06.2020 அன்று மக்கள் சந்திப்புக்களை நடத்தியுள்ளார் இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.........
கிரமங்களுக்கு தேவையான பொதுவான வீதி ஒன்று உள்ளது எங்கு போனாலும் மக்கள் சொல்லும் முறைப்பாடு யானைப்பிரச்சனை அதிகமாக உள்ள இடங்களில் மக்கள் யானைவேலியினை கேட்பார்கள் குடிநீர் பிரச்சனையும் மக்களின் தேவைப்பாடாக இருக்கின்றது

இதற்காக கடந்த காலங்களில் வாக்களித்துள்ளீர்கள் மக்கள் வாக்களித்தவர்கள் கடந்த நல்லாட்சியில் ஆழும் தரப்பாகவே இருந்திருப்பார்கள் கடந்த காலங்களில் வீட்டுச்சின்னத்திற்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள். அதில் என்ன பிரயோசனம் இருந்தது அவர்கள் ஆழும் கட்சியாகவே இருந்தும் கிராமத்தில் உள்ள மக்களின் தேவைப்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை.

மக்கள் சொல்கின்றார்கள் கிராமங்களை ஒதுக்கிவைத்துள்ளார்கள் என்று இவை எல்லாம் கடந்த காலங்களில் மக்கள் நம்பி வாக்களித்த அரசியல் வாதிகள் மக்களை கணக்கெடுக்காத நிலைதான் காரணம்.
அந்த நேரத்தில் முன்னால் ஜனாதிபதியுடன் இருந்த குறுகிய காலத்தில் மக்களின் தேவைப்பாடுகளை இனம் கண்டு மைதானம்,பாடசாலை,பொதுக்கிணறு இவ்வாறான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்தோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆழும்கட்சி உறுப்பினராக வன்னிமாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் முன்னால் அமைச்சர் சஜித் பிரேமதசா அவர்களின் வெற்றிக்காக பாடு பட்டார்கள் நான் மட்டும் தற்போதைய ஜனாதிபதிக்காக பாடுபட்டேன்.

நான் ஆழும் கட்சியாக வந்துவிட்டேன் அவர்கள் எதிர்கட்சியாக மாறினார்கள் ஆட்சி அதிகரத்தினை கொடுப்பதும் இறைவன் அதனை எடுப்பதும் இறைவன் கடந்த நன்கரை ஆண்டுகளாக ஆழும் கட்சியில் இருந்து மக்களின் பிரச்சனைகளை செய்யமுடியாதவர்கள் எதிர்கட்சியாக எவ்வாறு தீர்த்து வைப்பார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் பங்காளிகளாக மாற கிடைக்கவில்லை ஜனாதிபதி தேர்தலில் விட்ட பிளைகளை இனிவரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விடாமல் ஆட்சியின் பங்காளர்களாக மாறவேண்டும்

இன்றும் கிராமங்களில் மக்கள் சொல்லும் பல்வேறு பிரச்சனைகள் செய்து முடிக்கலாம் அது யாரால் செய்து முடிக்கலாம் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் எதிர்கட்சியினரால் அபிவிருத்தியினை செய்து தரமுடியுமா? முடியாது

கடந்தகாலங்களில் உள்ள அரசில் நம்பிக்கை இல்லாத்தீர்மானம்,வரவு செலவுத்திட்டத்தினை ஆதரித்ததற்காக சன்மானமாக அபிவிருத்திக்காக பல மில்லியன் ரூபா நிதிகள் வழங்கப்பட்டன அவை சரியான திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தி நடைபெறவில்லை

இனிவரும் எதிர்காலங்களில் அவர்கள் எல்லோரும் எதிர்கட்சியில் இருக்கப்போறார்கள் அபிவிருத்தியினை அவர்களால் செய்யமுடியாது முன்னால் அமைச்சர் றிசாட்பதியூதீனில் இருந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பு எம்பிகள் அனைவரும் எதிர்கட்சியில் இருக்கப்போறாங்கள் ஏன் என்றால் 52 நாட்களில் பிரதமல் அவர்களுக்கு ஏற்பட்ட அவமானமும் அரசியல்ரீதியாக சந்தித்த அவமானங்கள் இனிவரும் காலங்களில் ஆட்சியின் பங்காளிகளாக அவர்கள் இருக்கமாட்டார்கள்.

மகிந்தறாஜபக்ச மற்றும் கோட்பாஜயறாஜபக்ச ஆகியோரின் ஆட்சிக்கு உங்களின் ஆதரவு கடந்த காலங்களில் இல்லை ஆட்சிபீடத்திற்கு ஏற்றுவதில் தோல்வியடைந்த சமூகமாகவே மாறியுள்ளோம்.

இதற்கு காரணம்,கட்சி தலைவர்மார்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களை பிழையாக தங்களை பாதுகாப்பதற்காகவும் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சிபீடம் ஏறுவதற்காகவும் கூறிய பொய்களை மக்கள் நம்பியதுதான் காரணம்.

ஜனாதிபியினை பற்றி பல கருத்துக்கள் சொன்னார்கள் ஆனால் ஜனாதிபதி வந்து எட்டு மாதங்களாக அவரைப்பற்றி ஏனைய கட்சிகளும் இந்த பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறிய மாதிரியா அல்லது அவர் நல்லாட்சி செய்கின்றாரா என்று பாருங்கள் இவ்வாறு பிழையான கருத்துக்களையே மக்கள் மத்தியில் திணிக்கின்றார்கள்.

இந்தமுறை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை சமூகத்தின் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளை எடுத்து ஆட்சி அமைக்கக்கூடிய நிலையில் தற்போதைய அரசாங்கம் இருக்கின்றது.

இன்னிலையில் வெற்றியின் பங்காளிகளாக தமிழ் மக்களும் மாறவேண்டும். ஏனைய மக்களின் வாழ்க்கை தரத்தினைபோல் தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும் விதமாக வாக்குகள் அமையவேண்டும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்களின் ஆதரவுடன் நாங்கள் பாரிய அபிவிருத்திகளை இந்த பகுதிக்கு கொண்டுவரவேண்டும் என்றால் பாரிய வாக்குகளால் வெற்றிபெற வைக்கவேண்டும்.

கட்சியின் மேல்மட்டங்கள் எங்களை காணும் போது தமிழ் முஸ்லீம் சமூகம் ஏன் எங்களுக்கு வாக்களிக்கின்றார்கள் இல்லை என்று கேட்கின்றார்கள் நாங்கள் போரினை காரணம் காட்டினால் அவர்கள் சொன்னார்கள் போர் முடிந்த பின்னர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா அவர்களுக்கு வாக்களித்தார்கள்தானே அவர் போர் செய்யவில்லைய என்றும் கேட்கின்றார்கள்.

இந்த பகுதி மக்களை திசைதிருப்பும் விதத்தில் பாராளுமன் உறுப்பினர்களும், கட்சி தலைவர்களும் பிழையாக வழிநடத்துகின்றார்கள்.

தேர்தல் நெருங்கும் போது இனவாதம் பேசுவார்கள் சிங்கள கட்சிக்கா வாக்களிக்கப்போறீர்கள் என்று கேட்பார்கள் அவர்கள் மக்களின் வாக்கில் சென்றவர்கள் கடந்த நன்கரை ஆண்டுகளாக எந்த கட்சியினை ஆதரித்து எந்த கட்சியின் பிரதமரை ஆதரித்தார்கள் இதுதான் உண்மை நிலமை அவர்கள் செய்தால் சரி மக்கள் செய்தால் பிழை என்பதை காட்டுவார்கள் இதில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்....


வெற்றியின் பங்காளிகளாக தமிழ் மக்களும் மாறவேண்டும் - காதர் மஸ்தான். Reviewed by Author on June 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.