அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல்.....




குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன்.


கிருமிநாசினியை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன் கூறுகையில், இது குறித்த அரச திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குருநாகலில் இவ்வாறான தாக்கம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல்..... Reviewed by Author on June 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.