அண்மைய செய்திகள்

recent
-

நான் இனவாதி இல்லை. என்னிடம் இனத் துவேசம் இல்லை - மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன்

தனக்கெதிரான விமர்சனங்களே தனது வளர்ச்சிக்கு காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தெரிவிக்கையில், “இம்முறை மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. தமிழ் மக்கள் சிந்தித்து தங்களது வாக்குகளைச் செலுத்துவார்கள்.

நான் சில இடங்களுக்குச் செல்லும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்ற கேள்வியினைக் கேட்பார்கள். அதற்கு நான் பதில் வழங்குகின்றபோது எனது கடந்தகால அரசியல் செயற்பாடுகள் குறித்து விமர்சிப்பார்கள்.

இவ்வாறு எனக்கெதிரான விமர்சனங்களே எனது வளர்ச்சிக்குக் காரணம். எனவே தயவுசெய்து என்னை தொடர்ந்தும் விமர்சியுங்கள். இப்படி நீங்கள் என்னை விமர்சித்தால் என்னால் இம்முறை தேர்தலில் அமோக வெற்றிபெற முடியும்.

காலை வேளையில் நான் செய்திகளைப் பார்க்கின்றபோது எனக்கெதிரான விமர்சனங்கள் வரவில்லை என்றால், நான் ஒழுங்காக செயற்படவில்லை என்பதே அதற்குக் காரணமாக இருக்கும். எனவே என்னை தொடர்ந்தும் விமர்சியுங்கள்.

அதேபோன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்ற கேள்விக்கு அண்மையில் வேற்றுச்சேனையில் இடம்பெற்ற சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும். அங்குள்ள மக்கள் யாரை நம்பியிருக்கின்றார்கள் என்பதனை மக்கள் அவர்களுடைய செயற்பாடுகள் ஊடாக நன்றாக காட்டியிருந்தார்கள். அதேபோன்று நான் இனவாதி இல்லை. என்னிடம் இனத் துவேசம் இல்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.....


நான் இனவாதி இல்லை. என்னிடம் இனத் துவேசம் இல்லை - மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் Reviewed by Author on July 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.