அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் காரணமாக தொய்வு ஏற்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள்........

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக 50.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆரம்பித்து வைத்தனர். அதன்பின்னர் தொடர்ந்து இரவு பகலாக கட்டுமாணப் பணிகள் நடந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. எனினும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் டுபாயில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, கட்டுமானங்கள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து, நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது......



கொரோனா வைரஸ் காரணமாக தொய்வு ஏற்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள்........ Reviewed by Author on July 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.