அண்மைய செய்திகள்

recent
-

வலைத்தளங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் ; தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு..........

சமூக வலைத்தளங்களில் அதிகரித்துச் செல்லும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள கஃபே அமைப்பு அவ்வாறான பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக கரிசனை செலுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் இன்று (திங்கட்கிழமை) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நிலைவரங்களை அவதானிக்கும்போது, திகமடுல்ல மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.

குறிப்பாக திகாமடுல்ல மாவட்டத்தின் பொத்துவில், சாய்ந்தமருது மற்றும் அக்கறைப்பற்று ஆகிய பிரதேசங்களில் கட்சி சார்பாக மற்றும் சுயேட்சையாக வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு தமது தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அறிவூட்டும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போது, குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இதனால் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக பொத்துவில், சாய்ந்தமருது, அக்கறைப்பற்று ஆகிய பகுதிகளில் இந்நிலை அதிகரித்து காணப்படுவதால், குறிப்பிட்ட பிரதேசங்களின் பாதுகாப்பை அதிகரிப்பது அவசியம் என, இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் கஃபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது” என்றார்....



வலைத்தளங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் ; தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு.......... Reviewed by Author on July 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.