அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றை மறந்து வாழும் இனம் நிலைக்காது வரலாற்றை இழந்து வாழும் இனம் என்றும் பிழைக்காது - பறிபோகும் தமிழரின் தலை நகரம்

இங்கு இலங்கையின் வரலாறு மகா வம்சத்திலும் சூழ வம்சத்திலும் தீப வமசத்திலும் எழுதப்பட முன்னே எழுதப்பட்ட ஒரு வரலாறு
மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில் நாகரீகத்தின் எழுச்சி ஏற்படாத சமயத்திலே பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக பார்க்கப்பட்ட தமிழரின் தனிப்பெரும் அடையாளமாக கருதப்பட்ட கருதப்படுகின்ற ஆனால் தற்போது காப்பாற்றபட வேண்டிய அடையாளமே தமிழர் தலைநகரில் அமைந்துள்ள திருகோணேஸ்வரம் ஆகும்..

இலங்கை இந்தியா மாத்திரம் இன்றி உலகம் முழுவதும் பக்தர்களை கொண்ட திருகோணேஸ்வரம் மலை கொண்ட சூழலில் எழில் கொண்டு காட்சி அளிக்கின்றது நீலக்கடல் சூழ வன மயிலாடும் மண்ணியச் சோலை ஆகும்
இன்றுவரை தமிழரின் வரலாற்றை சுமந்து நிற்கும் இந்த திருகோணேஸ்வரம் பறிபோன தமிழனின் சொத்தாக மாறிவிடக்கூடாது..

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டும் சிங்கள பேரினவாதத்தின் தமிழின வரலாற்று அழிப்பு தற்போது திரு கோணேஸ்வரத்தையும் விட்டு வைக்கவில்லை
இராவணன் மலையை பிளந்த வரலாறு இன்று இன்று சிங்கள பேரினவாதத்தால் சின்னாபின்னமாகியுள்ளது..

கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணியின் முக்கிய நோக்கம் இவ்வாறன தமிழர்களின் வரலாற்றை முன்னோக்கி கொண்டு செல்கின்ற ஆதார பூர்வ அடையாளங்களை அழித்து வரலாறு இல்லாத இனமாக எம் இனத்தை மாற்றுவதே எனவே வரலாற்றை மறந்து வாழும் சமூகம் நிலைக்காது வரலாற்றை இழந்து வாழும் சமூகம் என்றும் பிழைக்காது
காலம் கடந்து விட முன் காக்க வேண்டியவற்றை காப்பதே எம் கடமை..


வரலாற்றை மறந்து வாழும் இனம் நிலைக்காது வரலாற்றை இழந்து வாழும் இனம் என்றும் பிழைக்காது - பறிபோகும் தமிழரின் தலை நகரம் Reviewed by Author on July 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.