அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற அமர்விற்கு படகில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்....

வரலாற்றின் முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினரொருவர் பாராளுமன்ற அமர்விற்கு படகில் வந்ததாக தெரியவருகிறது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின்
கன்னியமர்வு நேற்றுக் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே இவ்வாறு படகில் வந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 

 இது தொடர்பில் கோட்டே நகரசபையின் முன்னாள் நகர
முதல்வரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே கூறுகையில்,  ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைவாக தியவன்னா ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டது. 

இதனால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்தது. அத்துடன் கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக
நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

 

 

பாராளுமன்ற அமர்விற்கு படகில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்.... Reviewed by Author on August 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.