அண்மைய செய்திகள்

recent
-

விடுதலை புலிகளின் தலைவர் மற்றும் மலையக மக்கள் குறித்து பேசிய சஹ்ரான் - வெளிவந்த உண்மைகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைணக்குழுவில் நேற்று (22) கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கண்டி முருத்தலாவ நகருக்கு அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி நில ஆணையராளர் நாயக திணைக்களத்தின் அனுமதியுடன் நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் கட்டுமாண பணிகள் கடந்த 2014 நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பித்ததாக தெரிவித்தார்.

இருப்பினும், அந்த நிலையத்தை சுற்றியுள்ள காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும், எனவே அங்குள்ள ஏனைய காணிகளுக்கு பணம் செலுத்தியதாகவும், அதன் பின்னரே விஹாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்தாகவும் தேரர் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதேச இளைஞர்களுடன் இணைந்து விஹாரையின் தாது கோபுரம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கும் போது ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் அங்குள்ள காணியொன்றில் நடமாடியதை கண்டதாகவும், அவர் கூறினார்.

அது தொடர்பான புகைப்படத்தை விஹாரையின் சிறிய தேரர் ஒருவர் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்ததாகவும், அவர்கள் சஹ்ரான் ஹாஷிம் அணிந்திருந்த ஆடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தாகவும் தேரர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, தேரர்கள் அருகே இருந்த குழுவுடன் பேச்சு தொடுத்தாகவும் அதற்கமைய சஹ்ரான் ஹாசிம், தான் காத்தான்குடியில் இருந்து வந்ததாக கூறியதாகவும் அவர்கள் சிங்களத்தை நன்றாக பேசியதாகவும் கூறினார்.

அப்போது சஹ்ரான் ´காணியை வாங்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?´ என தேர்களிடம் வினவியதாகவும் கூறினார்.

ஆம், அதற்கு எதிரானவர் என்று கூறியபோது, சஹ்ரான் தான் ஒருபோதும் அங்கு ஒரு பள்ளியை கட்ட மாட்டேன் என்றும் மாறாக அங்கு ஒரு ´மையத்தை´ கட்டவுள்ளதாகவும் கூறியதாக தேரர் குறிப்பிட்டர்.

அந்த காணியில் ஒரு சமூக சேவை மையம் கட்டப்பட வேண்டும் என்று அப்போது தான் உணர்ந்ததாக தம்மரதன தேரர் கூறினார்.

இருப்பினும், அவர்கள் சென்ற பிறகு, சஹ்ரானும் அவரது குழுவும் அந்த காணியின் முஸ்லீம் உரிமையாளரைக் கவனித்தனர், ´இதை விற்கிறீர்களா?´ என்று அவர் கேட்டபோது, அந்த நிலத்தை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் கூறியதாக தேரர் தெரிவித்தார்.

அதன் பின்னர் சஹ்ரான் 2017 மார்ச்சில் இரண்டாவது முறையாகவும், ஒகஸ்ட் 2017 இல் மூன்றாவது முறையாகவும் நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்திற்கு வந்தாகவும் தேரர் குறிப்பிட்டார்.

அப்போது சஹ்ரான் கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதம் குறித்தும் அதிலுள்ள விசேட கலாசார விழுமியங்கள் தொடர்பில் விவாதித்தார் எனவும் அதன் பின்னர் அவர் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு தலைவர்கள் இல்லை என்று குற்றம் சாட்டியதாகவும் தேரர் தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை ஆதரவளிக்க வில்லை எனவும் அவ்வாறு அவ்வாறு அவர்கள் ஆதரவளித்திருந்தால் பெருந்தோட்ட மக்கள் இன்று பல துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் எனவும் கூறியதாக வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் தெரிவித்தார்.

அதன் பின்னர் சஹ்ரான் நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தில் இருந்து வெளியேறி வத்துருகும்புரே தம்மரத்தன தேரருக்கு தொலைப்பேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி கொடுத்த அச்சுறுத்தல் என்ன?

விடுதலை புலிகளின் தலைவர் மற்றும் மலையக மக்கள் குறித்து பேசிய சஹ்ரான் - வெளிவந்த உண்மைகள்! Reviewed by Admin on August 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.