அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழையக் கூடாது என ஜனாதிபதி எச்சரிக்கை.- பேராசிரியர் சூசை ஆனந்தன்

2020 ஜனாதிபதி தமது கொள்கைப் பிரகடன உரையின் போது “உரிய அனுமதியில்லாமல் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடியில் ரூடவ்டுபட்டால் கடும் நடவடிக்ககை எடுக்கப்படு;ம்” எனவும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 


இது வரவேற்கவேண்டிய ஒன்று. வீறாப்பாக பேசினால் மட்டும்போதாது அதனைச் செயலிலும் அவர் காட்டுதல் அவசியம். இலங்கையின் ஆழ்கடலிலும் வடபகுதி பாக்கு நீரிணைப்பகுதிகளிலும் வெளிநாட்டு மீனவர்களின் அத்துமீறல்கள் உண்டு. அயினும் இங்கு வடக்கு கடற்பரப்பில்தொடர்ச்சியாக பல வருடங்களாக அத்துமீறி நுழைந்து வளச் சூறையாடலில் ஈடுபட்டுவருவதுடன் வடபகுதி மீனவர்களின் மீன்பிடித்தொழில் பொருளாதாரத்தை மோசமாக பாதிப்படையச் செய்து வருகின்ற இந்திய மீனவர்களின் மீதே இவரது எச்சரிக்கை விழுந்துள்ளது போல் தெரிகிறது.

உலகம் முழுவதும் இழுவை மடித்தொழில் ((Bottom Trawlnet fishing)) தடைசெய்யப்பட்டுவிட்டது. 

இலங்கையிலும் இம்மீன்பிடிமுறை 06 யூலை 2017 அன்று தடைசெய்யப்பட்டு 1996 ஆம் ஆண்டு கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் மீன்பிடி தடைச்சட்டத்தில் இதுவும் சேர்க்கப்படும் என கூறப்பட்டது .கூட்டனைப்பின் வித்துவான் ஒருவரே பாராளுமன்றத்தில் கடந்த ஆட்சியின்போத இம் மீன்பிடி தொடர்பான பிரேரணையை முன்வைத்திருந்தார்.

ஆயினும் இது நடைமுறைப்படுத்தப் படவில்லை. தொடர்ந்தும் இந்த மீனபிடி முறை உள்ளூர் மற்றும் இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டே வந்துள்ளது.

மூன்று வருடங்கள் சென்றும் ஏன் இது நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதற்கு விடை காண்பது கடினமல்ல.

பெருமெடுப்பில் இது தொடர்பான விடயத்தைப் பாராளுமன்றில் கொண்டு வந்தவர் கூட தடை தொடர்பாக கூடமூச்சு விடவில்லை. கொழுத்த மதலாளிகளின் பின்னால் ஒளிந்தகொண்டு அரசியல் பிழைப்பு நடாத்தும் ஒருசில அரசியல் வாதிகள் சாதாரண மீனவர்களிளன் வாழ்க்கையுடன் விளையாடுவதை நிறுத்த புதிய ஐனாதிபதி அவர்களின் இந்த அத்துமீறும் மீனவர்கள் தொடர்பான எச்சரிக்கை எந்தளவில் தாக்கத்தைச் செலுத்தும் என்பது போகப்போகவே தெரியும். 

கடந்தகால அரசு முன்வைத்திருந்த இந்த மீன்பிடித் தடைச்சட்டத்தை புதிய

ஜ னாதிபதி அவர்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த ஆவன செய்யவேண்டும.; 

இது நடைமுறைப் படுத்தப்படின் வடபகுதி மீனவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக அமையும் .

வெளியிட மீனவர்களின் அத்துமீறல் மட்டுமல்ல உள்ளூர் மீனவர்களின் வடபகுதிக்கான மீன்பிடி அத்துமீறல்களும் திட்டமிட்ட ரீதியிலான மீனவர் குடியேற்ங்களும் தடுக்கப்படுவதும் அவசியம். 

அத்தோடு இடம்பெயர்ந்து தங்களது மீன்பிடி இடங்களையும்' வாழ்வாதாரத்தையும் இழந்து அவதியுறும் மீனவர்களும்(கொக்கிளாய் நாயாறு முள்ளிக்குளம் வலி வடக்கு …)தமது சொந்த இடம் திரும்பி சுதந்திரமாகத் தொழில்புரிய வழி சமைத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம். 

கடற்றொழில் அமைச்சருக்குகாத்திருக்கும் இச் இச்சவால்களை எப்படி கையாளப்போகிறரரோ?.பொறுத்திருந்து பார்ப்போம்.

பேராசிரியர் சூசை ஆனந்தன்


வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழையக் கூடாது என ஜனாதிபதி எச்சரிக்கை.- பேராசிரியர் சூசை ஆனந்தன் Reviewed by Author on August 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.