அண்மைய செய்திகள்

recent
-

‘தூய்மையான வவுனியா நகரம் ‘ மரநடுகை செயற்றிட்டம் ஆரம்பம்

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையினருடன் இணைந்து சூழலைப்பாதுகாக்கும் சமூக நலன்
செயற்றிட்டமான “தூய்மையான வவுனியாநகரம்” எனும் செயற்றிட்டம்வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் சமூக நலன் சார்ந்த செயற்றிட்டத்தின் கீழ் வவுனியா நகர்ப்பகுதிகளில் முக்கிய இடங்களில் வைப்பதற்காக முதற்கட்டமாக 36 குப்பை தொட்டிவைத்தல் மற்றும் அதனுடன் இணைந்தவாறான மரநடுகை செயற்றிட்டமும்  ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது .

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எஸ் .சுஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வவுனியா நகர சபை தலைவர் இ
.கௌதமன் , உப நகரபிதா கு . குமாரசாமி , செயலாளர் இ . தயாபரன் , நகரசபை உறுப்பினர் ரி . கே . இராஜலிங்கம் , வவுனியா பிராந்திய பிரதி
சுகாதாரசேவைப்பணிப்பாளர்  மகேந்திரன் , சுகாதாரவைத்திய அதிகாரி வைத்தியர் பிரிஸ்குறாஸ் , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வா வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மானவடு . வர்த்தகர் சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்கள் , வர்த்தகர்கள் , பொது அமைப்புக்கள் எனப்பலரும் கலந்து தொண்டனர்.


 

‘தூய்மையான வவுனியா நகரம் ‘ மரநடுகை செயற்றிட்டம் ஆரம்பம் Reviewed by Author on August 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.