அண்மைய செய்திகள்

recent
-

மலேசியாவில் 25 ஆயிரம் வெளிநாட்டினர் கைது, 21 ஆயிரம் வெளிநாட்டினர் நாடுகடத்தல்

மலேசியாவிலிருந்து கடந்த 8 மாதங்களில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 25,434 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 11 வரை எடுக்கப்பட்ட 4,764 நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடியேற்றத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


அதே சமயம், இந்நடவடிக்கைகளில் சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலைகளுக்கு அமர்த்திய 269 முதலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசிய உள்துறை அமைச்சர் Hamzah Zainudin தெரிவித்துள்ளார். இந்த முதலாளிகளில் மலேசியர்கள் மட்டுமின்றி இந்தோனேசியர்கள், தாய்லாந்தினர், வங்கதேசிகள், பாகிஸ்தானியர் மற்றும் இன்னும் சில நாட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  


அதே போல், இந்த ஆண்டில் 21,241 சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் 15,000 வெளிநாட்டினர் மலேசியாவின் குடியேற்றத்தடுப்பு மையங்களில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 50,000த்திற்கும் அதிகமான குடியேறிகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கொரோனா பெருந்தொற்று சூழலினால் சம்பந்தப்பட்ட நாடுகள் அவரது நாட்டவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள தயங்குவதால்  நாடுகடத்தும் செயல்பாடு கடினமாகி உள்ளது,” என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


பெருந்தொற்று சூழலுக்கு இடையில் நாடுகடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை மலேசிய அரசு பரிசீலிக்க வேண்டும் என Migrant Care எனும் மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Alex Ong தெரிவித்துள்ளார். “நாடுகடத்தும் செயல்பாடு சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்புடன் நடைபெற வேண்டும்,” என இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மலேசியாவில் 25 ஆயிரம் வெளிநாட்டினர் கைது, 21 ஆயிரம் வெளிநாட்டினர் நாடுகடத்தல் Reviewed by Author on August 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.