அண்மைய செய்திகள்

recent
-

இந்தோனேசிய- மலேசிய எல்லை அருகே சட்டவிரோத குடியேறிகளுடன் மலேசியர்கள் கைது

சட்டவிரோத குடியேறிகளாக அறியப்படும் இந்தோனேசியர்களை அழைத்துச் சென்ற மூன்று மலேசியர்கள் மலேசியாவின் Balai Ringin பகுதியில் Royal Ranger Regiment படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இப்படையினர் மலேசிய- இந்தோனேசிய எல்லையின் அருகே அமைந்திருக்கும் பாமாயில் தோட்டத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது மூன்று இரு சக்கர வாகனங்களில் சென்ற 4 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகளை கண்டிருக்கின்றனர். 


இதனையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, மூன்று மலேசியர்களும் குடியேறிகளை இந்தோனேசியாவுக்கு அழைத்துச் செல்லும்  இடைத்தரகர்களை செயல்பட்டமை தெரிய வந்துள்ளது. 


அவர்களிடமிருந்து மூன்று இரு சக்கர வாகனங்களும், 12,500 மலேசிய ரிங்கட்டுகள் (சுமார் 2.25 லட்சம் இந்திய ரூபாய்) மதிப்பிலான மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் Serian பகுதி காவல் நிலையித்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


 

இந்தோனேசிய- மலேசிய எல்லை அருகே சட்டவிரோத குடியேறிகளுடன் மலேசியர்கள் கைது Reviewed by Author on August 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.