அண்மைய செய்திகள்

recent
-

2018/2019 கல்வியாண்டுக்குரிய கலைப்பீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியானது!

 2018/2019 கல்வியாண்டுக்குரிய கலைப்பீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் 07ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2018/19 கல்வியாண்டு புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் வழிகாட்டல் விரிவுரைகளும் 07.09.2020 தொடக்கம் 11.09.2020 வரை காலை, மாலை என இரு அமர்வுகளாக நடைபெறும்.

முதலாவது தொகுதி மாணவர்களுக்கு 07.09.2020 வரவேற்பு நிகழ்வு காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி 10.30 மணிவரை நடைபெறும். வழிகாட்டல் விரிவுரைகள் 08.09.2020 தொடக்கம் 11.09.2020 வரை காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணிவரை நடைபெறும்.

இரண்டாவது தொகுதி மாணவர்களுக்கு 07.09.2020அன்று வரவேற்பு நிகழ்வு மாலை 1.30 மணிக்கு ஆரம்பமாகி 3.30 மணிவரை நடைபெறும். வழிகாட்டல் விரிவுரைகள் 08.09.2020 தொடக்கம் 11.09.2020 வரை மாலை 1.00 மணி தொடக்கம் பி.ப 5.30 மணிவரை நடைபெறும்.

அன்றைய தினம் வரவேற்பு நிகழ்வு முடிவடைந்தபின் மாணவர் பதிவுகள் மேற்கொள்ளப்படும். மாணவர் பதிவுகளின் போது மாணவர்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

07.09.2020 அன்று முதலாவது தொகுதி மாணவர்களுக்கு பி.ப. 1.30 மணிக்கும் இரண்டாவது தொகுதி மாணவர்களுக்கு காலை 9.00மணிக்கும் மாணவர் பதிவுகள் நடைபெறும்.

08.09.2020 தொடக்கம் 11.09.2020 வரை கலைமாணிப்பட்டப்படிப்பிற்கான வழிகாட்டல் விரிவுரைகள் நடைபெறும்.

எனவே 07.09.2020 – 11.09.2020 வரை நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்குரிய ஆயத்தங்களுடன் வரவேண்டும். விடுதி வசதி தேவைப்படும் வெளிமாவட்ட மாணவர்கள் 06.09.2020 அன்று தங்களுக்கு வழங்கப்படும் விடுதிகளில் தங்க முடியும்.

மாணவர்களுக்கான அழைப்பிதழ் கடிதங்களும் மாணவர் பதிவு தொடர்பாக கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் தொடர்பான அறிவித்தல் கடிதங்களும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டல் விரிவுரைகள் 11.09.2020 அன்று முடிவடைந்ததும் மாணவர் வீடு செல்ல முடியும்.

விரிவுரைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் பத்திரிகை வாயிலாகவும் கலைப்பீட இணையத்தளம் (www.arts.jfn.ac.lk ) வாயிலாகவும் அறியத் தரப்படும்.

2018/2019 கல்வியாண்டுக்குரிய கலைப்பீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியானது! Reviewed by Author on September 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.