அண்மைய செய்திகள்

recent
-

தாபனவிதிகோவையை முறையாக பின்பற்ற கோரி மன்னார் சுகாதார உதவியாளர் சங்கம் அடையாள பணிபுறக்கணிப்பு Video&Photos

 தாபனவிதிகோவையை முறையாக பின்பற்ற கோரி சுகாதார உதவியாளர் சங்கம் அடையாள பணிபுறக்கணிப்பு


02-09-2020

அரசாங்கத்தின் தாபனவிதி கோவையை ஒழுங்கான முறையில் அனைத்து சுகாதார உத்தியோகஸ்தர்களுக்கும் சமனான முறையில் பின்பற்றப்பட வேண்டும் எனவும் சுகாதார உதவியாளர்களை ஒருதலை பட்சமாக நடத்துவதை வடமாகாண சுகாதார திணைக்களம் நிறுத்த வேண்டும் எனவும் கோரி மன்னார் சுகாதார உதவியாளர் சங்க உத்தியோகஸ்தர்கள் இன்று புதன் கிழமை (2) காலை 8 மணி தொடக்கம் 11 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்

வடமாகாண சுகாதார திணைக்களத்தினால் அன்மையில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் சுகாதார உதவியாளர்கள் மாத்திரம் உள்வரவு மற்றும் வெளியேறும் போது விரல் அடையாளங்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படது எனவு அறிவுறுத்தப்பட்டிருந்தது

இந்த நிலையில் வைத்திய சாலையில் கடமை புரியும் அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும் தாபன விதி கோவை ஒன்று என்பதுடன் தங்களுக்கு விரல் அடையாள பதிவு கட்டயமாக்கப்பட்டால் நீதியின் அடிப்படையில் அனைவருக்கும் விரல் அடையாள பதிவு மேற்கோள்ள வேண்டும் எனவும் சுகாதார உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

வடமாகாண திணைக்களத்தால் சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும்  தங்களை ஒருவாரும் ஏனைய வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களை ஒருவாரும் நடத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்

எனவே இன்றைய தினத்திற்குள் வடமாகாண சுகாதார பணியாளர்களுக்கு ஒழுங்கான நீதியான முடிவை பெற்று தராத பட்சத்தில் தாய் சங்கத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் எனவே உரிய பதிலை இன்று உடனடியாக பெற்றுத்தறுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்

இதன் போது குறித்த போராட்ட பகுதிக்கு வருகை தந்த மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளர் திரு.வினோதன் குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய முறையில் பேசி தொடர்சியாக போராட்டம் இடம் பெறாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு தருவதாக தெரிவித்தார்

மூன்று மணி நேர சுகாதார ஊழியர்களின் போராட்டம் காரணமாக வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு உள் நோயாளர் பிரிவு நடவடிக்கைகள் அனைத்து ஸ்தம்பிதம் அடைந்ததுடன் மக்களின் அவசர சேவைக்கு என 25 சுகாதார ஊழியர்கள் மட்டும் ஒவ்வொரு வைத்திய சாலையிலும் கடமையில் ஈடுபட போராட்டகாரர்கள் வடமாகாணம் முழுவதும் ஒழுங்கு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கத








தாபனவிதிகோவையை முறையாக பின்பற்ற கோரி மன்னார் சுகாதார உதவியாளர் சங்கம் அடையாள பணிபுறக்கணிப்பு Video&Photos Reviewed by Author on September 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.