அண்மைய செய்திகள்

recent
-

தொழில் முயற்சிகளுக்கு காணிகள்; காணிக் கொள்கை சீர்திருத்தம்;

 தொழில் முயற்சிகளுக்கு காணிகள்; காணிக் கொள்கை சீர்திருத்தம்; காணிகளுக்கு மூன்று மாதத்திற்குள் உறுதிப்பத்திரம்; காணி அபிவிருத்தியின் பின்னர் வேறு ஒருவருக்கு கைமாற்ற முடியாது; பயன்படுத்தப்படாத LRC காணிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை:

மக்கள் பயன்படுத்தி வருகின்ற சிக்கலற்ற காணிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது காணி உறுதிப்பத்திரம் இல்லாமையே மக்கள் என்னிடம் முன்வைத்த மிக முக்கிய பிரச்சினை ஆகும்.
பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும், பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் உறுதிப்பத்திரம் இல்லாமையினால் அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உட்பட்டிருக்கின்றனர்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு - நாட்டுக்கும், நாட்டின் பொருளாதார கொள்கைக்கும் பொருத்தமான வகையில் அமைந்த காணி கொள்கை மறுசீரமைப்பு ஒன்று செய்யப்படவேண்டும்
இன்று பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச வியாபார காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலில் மேற்கண்ட விடயங்களை நான் குறிப்பிட்டேன்.
காணி உறுதிப்பத்திரம் இல்லாமையினால் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளதுடன், அபிவிருத்தியும் பாரிய பின்னடைவு கண்டுள்ளது.
விவசாய பொருளாதாரப் பொறிமுறை ஒன்றை கட்டியெழுப்பும்போது காணி பயன்பாட்டு கொள்கை மிக முக்கியம் ஆகின்றது.
குத்தகைக்கு விடப்பட்டுள்ள காணிகளை அபிவிருத்தி செய்ததன் பின்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அல்லது காணி உரித்துடைய நிறுவனம் அல்லது வேறு தரப்பினருக்கு பொறுப்பளித்தல் என்பது விவசாயிகள்
முகங்கொடுத்துள்ள மேலும் ஒரு சிக்கலாகும்.
“அவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம்” என அதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்தேன்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்துடைய பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படாத காணிகளை பொருத்தமான பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவது முக்கியத்துவம் மிக்கதாகும்.
இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கு அவற்றை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
பல்வேறு அரசாங்கங்களின் கீழ் ஜனாதிபதிகள் மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார்கள்.
ஆனாலும் பிற்பட்ட காலங்களில் வங்கிக்கடன் அல்லது பொருளாதார அலகாக அக்காணிகளை ஆக்கிக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர் என்பதனை பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கும்போது கடன் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் அவ்வாறே உள்நாட்டு மக்களுக்கும் அதுபோன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உறுதிப்பத்திரங்கள் தயாரிப்பது முக்கியத்துவமானதாகும்.
குத்தகை அடிப்படையில் காணி ஒன்றின் சிக்கலற்ற தன்மையை உறுதி செய்துகொள்வதற்கு 20க்கும் அதிகமான நிறுவனங்களில் மக்கள் அனுமதி பெற வேண்டி உள்ளனர்.
அதற்காக பல வருடங்கள் செலவாவதாகவும் இன்று சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறான நிலைகளுக்கு இடமளிக்காது இலகுவான நிபந்தனைகளின் கீழ் காணிகளின் உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அதிகாரிகளைப் பணித்துள்ளேன்.
அனுமதி கோரி அரச நிறுவனம் ஒன்றிற்கு முன்வைக்கப்படும் வேண்டுகோளுக்கு - 14 நாட்களுக்குள் பதிலளிக்க அவசியமான பின்புலத்தை அரச பொறிமுறையினுள் உருவாக்க வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தினேன்.
அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரனசிங்க, எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர மற்றும் அமைச்சு, இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
தொழில் முயற்சிகளுக்கு காணிகள்; காணிக் கொள்கை சீர்திருத்தம்; Reviewed by Author on September 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.