அண்மைய செய்திகள்

recent
-

தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 42,582 பேர் வௌியேற்றம்

நேற்றைய தினம் (18) பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு 320 நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

 இவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களான மிகிந்தலையில் ஒருவரும், இலங்கை பலாலி விமானப்படை தனிமைபடுத்தல் நிலையத்தில் 62 பேரும், முல்லைத்தீவு விமானப்படை தனிமைபடுத்தல் நிலையத்தில் 08 பேரும், ஹோட்டல் ஜெட்வின் புளு 41 பேரும், பியகம கிராமத்தில் 58 பேரும், திக்வெல்ல உல்லாச விடுதியில் 61பேரும், சீகிரிய பெஸ்கோ விலா 25 பேரும், சீகிரிய கிராமத்தில் 52 பேரும், ராஜகிரிய ஆயுர்வேத தனிமைபடுத்தல் நிலையத்தில் 05 பேரும், மந்தார உல்லாச விடுதி மிரிஸ்ஸயில் 7 பேரும் தனிமைபடுத்தலின் பின்னர் வெளியேறியுள்ளனர். நேற்று 18 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 42,582 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர்.

 அத்துடன் தற்போது முப்படையினரால் நிருவகித்து வரும் 59 தனிமைப்படுத்தல் மையங்களில் 5895 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 17 ஆம் திகதி நாடாளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1640 ஆகும். இதுவரை நாடாளவியல் ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 262,378 ஆகும். 

 கந்தகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய 638 நபர்கள் மீட்கப்பட்ட பின்னர் இதுவரை வெளியேறிவிட்டனர். புனர்வாழ்வு மையத்துடன் இணைக்கப்பட்ட மொத்தம் 11 பாதிக்கப்பட்ட நபர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தவிர வேறு எந்த சாதகமான சம்பவங்களும் சமூகத்திலிருந்து பதிவாகவில்லை என்பதால், அனைத்து இலங்கையர்களும் தங்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடரவும், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி அதன் பரவலைத் தடுக்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 42,582 பேர் வௌியேற்றம் Reviewed by Author on September 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.