அண்மைய செய்திகள்

recent
-

ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி சிறப்பான வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

 தொடரின் மூன்றாவது லீக் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியானது, நேற்று (திங்கட்கிழமை) டுபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

 அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தேவ்தத் படிக்கல் மற்றும் மற்றும் ஆரோன் பின்ஞ் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்காக 90 ஓட்டங்களை பகிர்ந்துக் கொண்டனர். தேவ்தத் படிக்கல் 56 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்து வெளியேற அடுத்ததாக அணித்தலைவர் விராட் கோஹ்லி, களமிறங்கினார். ஆனால் மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ், தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்த பிறகு எதிர்கொண்ட 11ஆவது ஓவரின் முதல் பந்திலேயே 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

 இதனைத் தொடர்ந்து ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கி அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கமைய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் டி வில்லியர்ஸ் 51 ஓட்டங்களையும், சிவம் டுபே 7 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

 பிலிப்பே ஓட்டமெதுவும் பெறாத நிலையில் களத்தில் இருந்தார். சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு சார்பில், நடராஜன், விஜய் சங்கர் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியால், 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

 இது பெங்களூர் அணியின் ஹைதராபாத் அணிக்கெதிரான இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியாகும். இதன்போது ஹைதராபாத் அணி சார்பில், டேவிட் வோர்னர் 6 ஓட்டங்களையும், ஜோனி பேயர்ஸ்டொவ் 61 ஓட்டங்களையும், மணிஷ் பாண்டே 34 ஓட்டங்களையும், பிரியம் கார்க் 12 ஓட்டங்களையும், விஜய் சங்கர் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், அபிஷேக் சர்மா 6 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில், ஆட்டமிழந்தனர்.

 அத்துடன் ரஷித் கான் 6 ஓட்டங்களுடனும், புவனேஸ்வர் குமார் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், சந்தீப் சர்மா 9 ஓட்டங்களுடனும், மிட்செல் மார்ஷ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழக்க நடராஜன் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் சிவம் டுபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெயின் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக நான்கு ஓவர்கள் வீசி 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த யுஸ்வேந்திர சஹால் தெரிவுசெய்யப்பட்டார்

ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி சிறப்பான வெற்றி! Reviewed by Author on September 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.