அண்மைய செய்திகள்

recent
-

ஆண்டுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்!

ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் திறனை சீனா பெறும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

 இதுகுறித்து, சீன தேசிய சுகாதார ஆணையத்தைச் சோ்ந்த ஷெங் ஷோங்வெய் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சீனாவில் உள்ள மருந்து ஆலைகளின் கொரோனா தடுப்பூசி உற்பத்தித் திறன், இந்த ஆண்டு இறுதியில் ஆண்டுக்கு 61 கோடி என்ற நிலையை அடையும்.

 அடுத்த ஆண்டுக்குள், ஆண்டுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் திறனை சீனா பெற்று விடும். பொதுமக்கள் இடையே முன்னுரிமையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும். சுகாதாரப் பணியாளா்கள், எல்லையில் பணியாற்றும் வீரா்கள், வயது முதியவா்கள் ஆகியவற்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அவா். தற்போது 11 வகையான கொரோனா தடுப்பூசிகளை சீனா சோதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்! Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.