அண்மைய செய்திகள்

recent
-

உயர் தர பரீட்சை ஆரம்பமானது : முகக்கவசங்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகைதந்த பரீட்சாத்திகள்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளது.

 இந்த பரீட்சைகள் இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

 புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி முகக்கவசம் அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு வருகைதந்தனர்.





உயர் தர பரீட்சை ஆரம்பமானது : முகக்கவசங்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகைதந்த பரீட்சாத்திகள். Reviewed by Author on October 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.