அண்மைய செய்திகள்

recent
-

5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

 கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. இதற்காக 400 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

  இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 75000 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று முதல் மினுவங்கொடை – திவுவலபிட்டி, அத்தனகல்ல மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட 72 ஆயிரத்து 345 பேருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் பின்னர், அந்தப் பகுதியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தின் 19 பொலிஸ் அதிகார பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் வறியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்தினால் நிதியமைச்சில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்! Reviewed by Author on October 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.