அண்மைய செய்திகள்

recent
-

தற்போதுவரை மன்னாரில் 922 மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் இருப்பினும் நிலமை கட்டுப்பாட்டுக்குள் மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சி.குணபாலன் தெரிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டதில் இதுவரை 922 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மன்னார் பட்டித்தோட்டத்தை சேர்ந்த 130 குடும்பங்களை சேர்ந்த 443 பெரும் பெரியகடை பகுதியை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 479 பேருமாக மொத்தம் 922 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கொவிட் உறுதி செய்யப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தவிர்ந்த குறித்த கிராமங்களை சேர்ந்த ஏனையவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.சி.குணபாலன் தெரிவித்துள்ளார்


 இன்று காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்றைய தினம் நாங்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனையின் மூன்றாவது நிலை முடிவுகள் கிடைக் பெற்றுள்ளன இந்த முடிவுகளின் படி மேலும் மூவறுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து நாங்கள் நேற்றில் இருந்து 24 மணி நேர முடக்க நிலையை இரண்டு கிராமங்களுக்கு ஏற்படுத்தியிருந்தோம் இன்றைய தினம் முழுமையாக அப்பிரதேசங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது இது தொடர்பாக இன்றைய தினம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடன் கலந்துரையாடிய போது இன்று மாலையுடன் முடக்க நிலையில் இருந்து விடுவிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளார்

 எனவே இன்றைய தினம் பரிசோதனைகள் சுமூகமான முறையில் நிறைவடையுமாக இருந்தால் இன்று மாலை 6 மணியில் இருந்து மீண்டும் மக்களின் இயல்பான நிலைக்கு அக்கிராமங்களை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார் அதே நேரத்தில் இதுவரை எமது பகுதியில் சமூக தொற்று இனங்கானப்படாது இருந்தால் கூட மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் விழிப்பாக இல்லாத நிலையில் நாங்கள் இந்த அபாய நிலையை மேலும் எதிர் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்

 மேலும் அரச அலுவலகங்கள் அனைத்தும் இயல்பான நிலையில் தங்கள் பணிகளை மேற்கொள்ளும் எனவே பொய்யான தகவல்களை நம்பி அலுவலகத்துக்கு சமூகம் அழிப்பதை தவிர்க்கவேண்டாம் எனவும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனைத்து அரச ஊழியர்களும் அலுவலகங்களுக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுத்தார் அத்துடன் உயர் தர பரீட்சைகளை பொறுத்த வரையில் பரீட்சைகளுக்கான சகல நடவடிக்கைகளும் பிராந்திய சுகாதார பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஒரு சில இடங்களில் மூன்றாம் நிலை தொற்றுக்குள்ளாகிய மாணவர்கள் விசேட அறைகளில் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவே மன்னார் மாவட்டத்தை பொருத்த வரையில் பரீட்சைகள் மிகவும் சுமூகமான முறையில் இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை மன்னாரில் 922 மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் இருப்பினும் நிலமை கட்டுப்பாட்டுக்குள் மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சி.குணபாலன் தெரிவிப்பு Reviewed by Author on October 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.