அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் உண்மையான கொலையாளி யார் என்று கண்டு பிடிப்பதில் இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளவில்லை.

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லாத நபரை குறித்த வழக்கு விசாரனைகளில் உற் புகுத்ததன் காரணமாக உண்மையில் குறித்த கொலையை மெற்கொண்ட நபர் யார் என்று கண்டு பிடிப்பதில் இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளாது, சந்தேகமாக ஒரு நபரை குறித்த வழக்கு விசாரனையில் உற்புகுத்தி உள்ளனர் என சட்டத்தரணி எஸ்.டிணேசன் தெரிவித்துள்ளார். -மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை(9) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 

குறித்த வழக்கு விசாரனைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சந்தேக நபர் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.டினேசன் அவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மன்னார் மாந்தை மேற்கில் கடந்த 3 ஆம் திகதி (3-11-2020) இரவு கிராம அலுவலகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக 4 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக சட்ட வைத்திய அதிகாரிக்கு பாரப்படுத்தப்பட்டு, குறித்த சடலம் சடலப் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டது.

 இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை இலுப்பைக்கடவை பொலிஸார் கைதுசெய்து விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை(9) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதன் போது குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை(7) குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்டதாகக் கூறி, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் கள்ளியடி என்ற இடத்தில் அரைக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளராகவும் இரண்டாவது சந்தேக நபர் குறித்த அரைக்கும் ஆலையில் (மில்) கடமையாற்றுகின்றவர் எனவும் தெரிய வருகின்றது. 

 குறித்த அரைக்கும் ஆலையில் சம்பளத்திற்கு கடமையாற்றிய இரண்டாவது சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரான அரைக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் திங்கட்கிழமை (9) மேல் அறிக்கையினை மன்றில் தாக்கல் செய்து குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை (9) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதன் போது குறித்த மேல் அறிக்கையின் போது இலுப்பைக்கடவை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த அறிக்கையில், குறித்த ஆலையில் கூலிக்கு வேலை செய்த குறித்த நபர் மற்றும் சந்தேக நபர் கூராய் பகுதிக்கு சென்ற போது, குறித்த ஆலையில் கூலிக்கு வேலை செய்த குறித்த நபரை அழைத்து சென்றதாகவும், தான் அவருடன் சென்றதாகவும், தன்னை குறித்த இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் விட்டு மண்வெட்டி மற்றும் அலவாங்கை கொண்டு சென்றதாகவும் குறித்த நபர் பொலிஸாரின் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

 ஆனால் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு, உயர் அதிகாரிகள் மற்றும் உயர் மட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற அழுத்தங்களுக்கு அமைவாக குறித்த வழக்கின் சந்தேக நபரை எவ்வாறு கைது செய்ய வேண்டும் என்று இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. குறித்த கொலையுடன் தொடர்பு பட்டவர்களை கைது செய்ய பலதரப் பட்டவர்களிடம் இருந்து இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு அழுத்தம் பிரையோகிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சந்தேக நபர் ஒருரை உற்புகுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில், குறித்த வழக்கு விசாரனையின் சந்தேக நபரை உற்புகுத்தி உள்ளனர். குறித்த வழக்கு விசாரனையின் இரண்டாவது சந்தேக நபரை அரச சாட்சியாக மாற்றியுள்ள குறித்த நபர் தற்போது மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் சயன அறையில் வைத்து குறித்த வழக்கு விசாரனை தொடர்பான உண்மையினை மன்னார் நீதவானிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

 இதன் போது இலுப்பைக்கடவை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மேலதிக அறிக்கையில் குறித்த அரைக்கும் ஆலையில் வேலை செய்யும் நபரினால் வழங்கப்பட்ட தவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், சட்டத்தரணிகள் மற்றும் நீதவான் முன்னிலையில் குறித்த நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த முறைப்பாடு இலுப்பைக்கடவை பொலிஸாரின் தூண்டுதலுக்கு அமைவாகவே குறித்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது எனவும்,தான் இலுப்பைக்கடவை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தனது ஆடையினை முழுமையாக அகற்றி இரும்புக் கம்பியினால் தாக்கி,குறித்த வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ,தன்னை கடுமையாக தாக்கி பொலிஸார் கூறியதற்கு அமைவாகவே தான் ஏற்றுக்கொண்டதாகவும் குறித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேக நபர் குறித்த வழக்கில் தவறான விடையங்களை உற்சேர்த்து குறித்த வழங்கின் சந்தேக நபராக கொண்டு வரப்பட்டுள்ளார். 

 எவ்வித தொடர்பும் இல்லாத நபரை குறித்த வழக்கு விசாரனைகளில் உற் புகுத்ததன் காரணமாக உண்மையில் குறித்த கொலையை மெற்கொண்ட நபர் யார் என்று கண்டு பிடிப்பதில் இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளாது, சந்தேகமாக ஒரு நபரை குறித்த வழக்கு விசாரனையில் உற்புகுத்தி உள்ளனர். குறித்த வழக்கு விசாரனையை திசை திருப்பும் வகையில் குறித்த செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளது. இதனை பயண்படுத்தி உண்மையான கொலையாளியினை கண்டு பிடிப்பதில் இருந்து பொலிஸார் தமது கடமையில் இருந்து தவறி உள்ளனர். தற்போது கொலை செய்யப்பட்டுள்ள கிராம அலுவலகர் மாந்தை மேற்கில் மண் அகழ்விற்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.குறித்த பிரதேசத்தில் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

 அந்த நிலையில் அவருக்கு எதிராக அப்பிரதேசத்தில் பலர் இருந்துள்ளனர்.யாரோ ஒருவர் தமது பலியினை தீர்ப்பதற்காக குறித்த நபரை சந்தேக நபராக உற்புகுத்து தாங்கள் தப்பித்துக் கொள்ள முனைந்துள்ளனர். குறித்த விடையத் இரண்டாவது சந்தேக நபரினால் மன்னார் நீதவானிடம் சயன அரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் எதிர் வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாது சந்தேக நபரான அரச சாட்சியாக மாறிய நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் மற்றும் பாதீக்கப்பட்ட நபர் சார்பாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


.
மன்னார் மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் உண்மையான கொலையாளி யார் என்று கண்டு பிடிப்பதில் இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளவில்லை. Reviewed by Author on November 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.