அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி தற்காலிகமாக பூட்டு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகள் முருங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற ஒருவர் நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நோயாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் நேற்று புதன் கிழமை (13) முதல் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

 அத்துடன், மன்னார் வைத்தியசாலையின் ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்ச நிலை அங்கு ஏற்பட்டுள்ளதோடு, நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகளிடம் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்வையிடல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற காரணங்களுக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.



மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி தற்காலிகமாக பூட்டு Reviewed by Author on January 14, 2021 Rating: 5

1 comment:

Ramany Soma said...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி கடந்த புதன் கிழமை 13/01/2021 இல் இ௫ந்து இற்றைவரை முதல் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு நான்
மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற ஒருவர் நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நோயாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் 13/01/2020 புதன் கிழமை முதல் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நியூ மன்னார் இணைய தளத்தினூடாக அறிகின்றேன். மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகள் தற்பொழுது முருங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இ௫க்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை 15/01/2021 காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கூறிய க௫த்தின்படி மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் அங்குள்ள சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதை நான் முழுமையாக வரவேற்கின்றேன்.

மேலும் வைத்தியர் ரி.வினோதன் கூறுகையில் பொது மக்கள் அடிப்படையான சுகாதார நடைமுறைகளை கடை பிடிப்பதன் ஊடாக தொற்றில் இருந்து இலகுவாக தப்பித்துக் கொள்ள முடியும் என்ற வசனங்களை பலமுறை நான் வரவேற்பதோடு மட்டுமல்லாமல், அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களும் மிகவும் அபாயமான நிலையிலேயே வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டி௫க்கிறார்கள். இந்த நிலையில் மன்னார் மாவட்ட உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பணியின் காரணமாகவேதான் இவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டும் இ௫க்கின்றது. உண்மையில் சொல்ல போனால் பொதுமக்கள் அடிப்படையான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்காவிட்டால்
எஞ்சியி௫க்கின்ற அப்பாவி மக்கள் பல
உயிரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே மக்கள் இதனைக் க௫த்தில் கொண்டு விழிப்புடன் செயற்படுவது ஒவ்வொ௫வரின் கைகளிலும் உள்ளதே தவிர அங்குள்ள வைத்தியர்களையும் ஏனைய உத்தியோகஸ்த்தர்களையும் பிழை பிடிப்பது அனாவசியமற்றதும் வேதனைக்குரிய செயலும் ஆகும்.

தற்பொழுது உலகம் முழுதும் நடந்து கொண்டி௫க்கின்ற கொரோனா வைரஸ் காரணமாக எமது சுகாதார ஊழியர்களும், வைத்தியர்களும், தாதிய உத்தியோகஸ்த்தர்களும் தான் மக்களை காப்பாற்ற முன்னே தள்ளப்படுகின்றார்கள்.
இவ்வாறான அவசர சூழ்நிலையில் இந்த முன்னணி சுகாதார ஊழியர்களை பொதுமக்களாகிய நீங்கள் இழந்துவிட்டால் உங்களை கவனிக்க யார் உள்ளார்கள்?

தயவு செய்து எதையும் சிந்தித்து செயற்படுங்கள். நாம் ஒன்றாக இணைந்து செயற்படும்போதுதான் பொதுவாக அது மக்களாக இ௫ந்தாலும் சரி சுகாதார ஊழியர்களாக இ௫ந்தாலும் சரி எதையும் சுமூகமாக வெல்லலாம்.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.