அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை(15) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களின் 3 நபர்கள் மன்னார் பஸார் பகுதியில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் பணியாற்றுபவர்கள்.நான்காவது தொற்றாளர் பஸ் நிலைய பகுதி ஒன்றில் அமைந்துள்ள புடவை விற்பனை நிலையத்தின் உரிமையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவருடைய விற்பனை நிலையத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 5 ஆவது நபர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரு உத்தியோகத்தர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 இவர் கொரோனா தொற்றுள்ள நோயாளர் ஒருவரை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.இந்த நிலையிலே குறித்த உத்தியோகத்தருக்கு நோய் தொற்றி இருக்கலாம் என நம்புகின்றோம். -மன்னார் மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரை 21 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 நபர்கள் எழுந்தமானமாக சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதும், எஞ்சிய 4 நபர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போதும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 மன்னார் நகரப்பகுதி மற்றும்,கடைத்தொகுதிகளில் எழுந்தமானமாக பீ.சி.ஆர்.பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த புதன் கிழமை மன்னார் மன்னார் நகர் பகுதியில் கடைகளில் வேலை செய்கின்றவர்கள், கடை உரிமையாளர்கள்,கடைகளுக்கு வந்தவர்கள் என 452 நபர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாதிரிகள் அபேட்சா மற்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைகளுக்கு பரிசோதனைக்காக அனுக்கி வைக்கப்பட்டுள்ளது. 

 முடிவுகளை எதிர் பார்த்துள்ளோம். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கை அரச போக்குவரத்து மன்னார் சாலை டிப்போவில் பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் கலந்து உரையாடியதன் பிரகாரம் அவர்களுக்கு தொற்றானது சாதாரண நிலமையில் ஏற்படவில்லை. அவர்கள் சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினால் தொற்று ஏற்பட்டுள்ளதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

 எனவே பொது மக்கள் அடிப்படையான சுகாதார நடைமுறைகளை கடை பிடிப்பதன் ஊடாக தொற்றில் இருந்து இலகுவாக தப்பித்துக் கொள்ள முடியும். மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களும் மிகவும் அபாயமான நிலையிலேயே வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

 முதலாவது நபர் பேசாலை வைத்தியசாலையில் இருந்து சுவாசத்தினறல்,குருதி அமுக்க குறைபாட்டுடன் மாற்றப்பட்டார். மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் மன்னார் பொது வைத்தியசாலை உத்தியோகத்தர்களினால் தொடர்ந்தும் சிகிச்சை அழிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றார். இரண்டாவது நபர் கடுமையான வயிற்றோட்டம்,குருதி அமுக்க குறைவு காரணமாக எருக்கலம் பிட்டி வைத்தியசாலையில் முதலுதவி செய்யப்பட்டு,மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

 தற்போது பிம்புர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எமது உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பணியின் காரணமாக இவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. எனவே தொடர்ச்சியாக அதிகளவான நோயளர்கள் இவ்வாறு அபாயமான நிலமையில் வரும் போது இவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக எமது உத்தியோகத்தர்கள் கடமையாக பாடுபட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் உயிர் இழப்புக்களையும் மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே மக்கள் அடிப்படையான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக நீங்கள் சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற போது கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
                      


மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளது. Reviewed by Author on January 15, 2021 Rating: 5

1 comment:

Ramany Soma said...


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி கடந்த புதன் கிழமை 13/01/2021 இல் இ௫ந்து இற்றைவரை முதல் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு நான்
மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற ஒருவர் நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நோயாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் 13/01/2020 புதன் கிழமை முதல் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நியூ மன்னார் இணைய தளத்தினூடாக அறிகின்றேன். மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகள் தற்பொழுது முருங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இ௫க்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை 15/01/2021 காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கூறிய க௫த்தின்படி மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் அங்குள்ள சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதை நான் முழுமையாக வரவேற்கின்றேன்.

மேலும் வைத்தியர் ரி.வினோதன் கூறுகையில் பொது மக்கள் அடிப்படையான சுகாதார நடைமுறைகளை கடை பிடிப்பதன் ஊடாக தொற்றில் இருந்து இலகுவாக தப்பித்துக் கொள்ள முடியும் என்ற வசனங்களை பலமுறை நான் வரவேற்பதோடு மட்டுமல்லாமல், அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களும் மிகவும் அபாயமான நிலையிலேயே வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டி௫க்கிறார்கள். இந்த நிலையில் மன்னார் மாவட்ட உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பணியின் காரணமாகவேதான் இவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டும் இ௫க்கின்றது. உண்மையில் சொல்ல போனால் பொதுமக்கள் அடிப்படையான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்காவிட்டால்
எஞ்சியி௫க்கின்ற அப்பாவி மக்கள் பல
உயிரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே மக்கள் இதனைக் க௫த்தில் கொண்டு விழிப்புடன் செயற்படுவது ஒவ்வொ௫வரின் கைகளிலும் உள்ளதே தவிர அங்குள்ள வைத்தியர்களையும் ஏனைய உத்தியோகஸ்த்தர்களையும் பிழை பிடிப்பது அனாவசியமற்றதும் வேதனைக்குரிய செயலும் ஆகும்.

தற்பொழுது உலகம் முழுதும் நடந்து கொண்டி௫க்கின்ற கொரோனா வைரஸ் காரணமாக எமது சுகாதார ஊழியர்களும், வைத்தியர்களும், தாதிய உத்தியோகஸ்த்தர்களும் தான் மக்களை காப்பாற்ற முன்னே தள்ளப்படுகின்றார்கள்.
இவ்வாறான அவசர சூழ்நிலையில் இந்த முன்னணி சுகாதார ஊழியர்களை பொதுமக்களாகிய நீங்கள் இழந்துவிட்டால் உங்களை கவனிக்க யார் உள்ளார்கள்?

தயவு செய்து எதையும் சிந்தித்து செயற்படுங்கள். நாம் ஒன்றாக இணைந்து செயற்படும்போதுதான் பொதுவாக அது மக்களாக இ௫ந்தாலும் சரி சுகாதார ஊழியர்களாக இ௫ந்தாலும் சரி எதையும் சுமூகமாக வெல்லலாம்.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.