அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் COVID சடலங்கள் இடப்பற்றாக்குறையால் கங்கைக் கரையில் தகனம்

இந்தியாவில் COVID காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்கள் இடப்பற்றாக்குறையால் கங்கைக் கரையில் தகனம் செய்யப்படுகின்றன. வட இந்தியாவில் பீஹார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கங்கைக் கரையில் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் வெவ்வேறு பகுதிகளில் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, பீஹாரில் கங்கை ஆற்றில் மிதந்து வரும் சடலங்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுடையதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. இன்று காலையுடன நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 3,876 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 

இதுவரை 2,29,91,000 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், சுமார் 2,50,000 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் COVID சடலங்கள் இடப்பற்றாக்குறையால் கங்கைக் கரையில் தகனம் Reviewed by Author on May 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.