அண்மைய செய்திகள்

recent
-

இராணுவ, பொலிஸ், சுகாதார பிரிவு பிரசன்னத்துடன் இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கலுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள Covid 19 சூழல் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கலுக்கு உப்புநீரில் விளக்கேற்றுவதற்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு பலத்த இராணுவ, பொலிஸ், சுகாதார பிரிவின் பிரசன்னத்துடன் கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்றுள்ளது. வருடந்தோறும் முள்ளியவளை காட்டா விநாயகர் கோவிலிலிருந்து நடையாக சிலவத்தை தீர்த்த கரைக்கு சென்று கடலில் உப்புநீரில் விளக்கேற்றுவதற்க்காக தீர்த்தம் எடுப்பது வழமை. 

ஆனால் இவ்வருடம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை Covid 19 காரணமாக அவ்வாறு அல்லாமல் மட்டுபடுத்தபட்டவர்கள் மாத்திரம் தீர்த்தம் எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்டு உளவியந்திரத்தில் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். இந்த தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான இராணுவம், பொலிஸ் பிரசன்னமாகியிருந்தனர். வீதிகள் தோறும் மக்கள் கும்பங்கள் வைத்து தேங்காய் உடைக்க இராணுவம், பொலிஸார் அனுமதி வழங்கவில்லை.

 இன்றிலிருந்து எதிர்வரும் 24.05 திங்கள் வரை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் உப்புநீரில் விளக்கெரியும் அதிசயம் இடம்பெற்று 24ம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கல் இடம்பெறவுள்ளது. Covid 19 பரவல் காரணமாக இம்முறை வைகாசி விசாக பொங்கலுக்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு சடங்குகள் பூசைகள் மட்டும் சுகாதார பிரிவினரால் அனுமதிக்கப்பட்டவர்களுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














இராணுவ, பொலிஸ், சுகாதார பிரிவு பிரசன்னத்துடன் இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கலுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு! Reviewed by Author on May 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.