அண்மைய செய்திகள்

recent
-

5 கர்பிணிகள் கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்போடு , தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். இதுவரையில் 5 கர்பிணிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை பிரிவின் மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர் மயூரமான தெவலகே தெரிவித்தார். 

 மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர்களின் சங்க அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , கடந்த ஆண்டு முதலாம் மற்றும் இரண்டாம் அலையின் போது கொவிட் தொற்றுக்குள்ளான 56 கர்பிணிகள் குழந்தை பிரசவித்தனர். இவ்வருடம் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் மாத்திரம் இதுவரையில் 423 கர்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , இவர்களில் 90 பேர் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளதோடு , 84 கர்பிணிகளுக்கு சாதாரண பிரசவம் இடம்பெற்றுள்ளது.

  இதே போன்று ஹோமாகம வைத்தியசாலையில் 140 கர்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் நால்வருக்கு சத்திர சிகிச்சையும் 13 பேருக்கும் சாதாரண பிரசவமும் இடம்பெற்றுள்ளது. மேலும் மினுவாங்கொடை , நெவில் பிரனாந்து, தெல்தெனிய பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் பல வைத்தியசாலைகளிலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்படுகிறது. இதுவரையில் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட தீவிர அறிகுறிகளுடைய 5 கர்பிணிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுக்குள்ளான கர்பிணிகளுக்கு சாதாரண பிரசவமானது அபாயமிக்கதாகவுள்ளது. இதன் போது தாயினதும் குழந்தையினதும் உயிருக்கு உத்தரவாதமளிப்பது கடினமாகவுள்ளது. 

 எனவே தான் தற்போது சத்திர சிகிச்சையூடாக குழந்தை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. சாதாரண தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொற்றுக்குள்ளாகும் கர்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும். எனவே இதற்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை முன்னரே செய்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணர் கோரிக்கை விடுத்துள்ளார். 

5 கர்பிணிகள் கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! Reviewed by Author on May 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.