அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் குண்டு வெடிப்பு – பெண்ணொருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு வைத்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்.




முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் குண்டு வெடிப்பு – பெண்ணொருவர் காயம் Reviewed by Author on June 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.