அண்மைய செய்திகள்

recent
-

யாழ் இந்து மாணவன் வாட்ஸ் அப்பிற்கு இணையாக உருவாக்கிய செயலி தொடர்பாக

யாழ் இந்து மாணவனின் சாதனை.. வாட்ஸ் அப்பிற்கு இணையாக புதிய அன்றாய்டு செயலி உருவாக்கி உள்ளார் என்று பரவலாக நேற்று ஊடகங்களில் செய்திகள் வந்தன.. இன்று திடீரெண்டு அது fake என்றும் அம்மாணவன் உருவாக்கவில்லை என்றும் சில ஊடகங்கள் வந்திருக்கிறார்கள்.. கணனி விஞ்ஞான மாணவன் என்ற வகையில் சில விடயங்களை தெளிவு படுத்தலாம் என்று இருக்கிறேன்.. அன்றொயிட் ஆப்ஸ்கள் உருவாக்க இப்போது பல வழிகள் இருக்கின்றன. 

 ஒன்று முழுமையாக அப்பினை உருவாக்குதல்.. இதற்கு முழுமையான programming அறிவும், பல மனித உழைப்பும், அனுபவமும் தேவை. அடுத்தபடியாக பல ஆப்ஸ்கள் open source ஆக யாராலும் எடுத்து மாற்றக்கூடியதாக github போன்ற வலைத்தளங்களில் இலவசமாக பதிவிட்டிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அதனை எடுத்து modify பண்ண முடியும். இதற்கும் programming பற்றிய அறிவு நிச்சயமாக தேவை அத்துடன் ஓரளவான மனித உழைப்புடன் உருவாக்கலாம். இதற்கும் அடுத்த படியாக programming பற்றிய எந்தவித அறிவுமே தேவையில்லாத ஒரு முறை இருக்கிறது. 

சில இணையதளங்கள் மிக சொற்பமான template களை தருகின்றன. அதாவது ஏற்கனவே அந்த template இல் app இனை உருவாக்கி வைத்திருப்பார்கள். நாம் நமக்கு பிடித்த போல அந்த app நிறம், பெயர், ஐகான் வடிவம், போன்றவற்றை நாம் படிவத்தில் நிரப்பினாலே போதும் எமக்காக அந்த template customize செய்யப்பட்டு app இனை தரவிறக்கம் செய்ய லிங்க் வந்துவிடும். இதற்கு எந்தவிதமான கணனி அறிவும் தேவையில்லை.. சாதாரணமாக form ஒன்றை நிரப்பும் அறிவு இருந்தாலே போதுமானது. ( உதாரணமாக blogger ஐ பயன்படுத்தி வலைத்தளம் உருவாக்குவது போன்றது.. இது அதனை விட இலகுவானது) இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் பல app generator தளங்கள் போலியானவை. ஆப் எனும் பெயரில் நமக்கு "ஆப்பு" வைப்பவை. 

அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள அப்பில் எமது பெயர், ஐகான் ஐ போட்டு மட்டுமே தருவதால் அவர்கள் என்ன உருவாக்கி வைத்துள்ளார்கள் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. பல கொடிய வைரஸ்களை கூட இதன் மூலம் பரவ விட வாய்ப்புகள் இருக்கின்றன. எமது தொலைபேசியில் permissions ஐ நாம் accept பண்ணுவதால் நமது தகவல்களை புகைப்படங்களை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதனால் இதனிடமிருந்து முடிந்த அளவு விலகி இருப்பது நமது privacy கு பாதுகாப்பானது. முதலாவதாக நான் இந்த துறையில் இந்த அளவு ஈடுபாடு காட்டியதற்காக அந்த மாணவனை பாராட்டிகிறேன். நிச்சயமாக பெரும்பாலான சிறுவர்கள் இதனை முயற்சி செய்து பாத்திருக்கவே மாட்டார்கள். நேற்றுத்தான் நான் இந்த செயலியை பரிசோதனை நோக்கத்திற்காக எனது தற்காலிக போனில் நிறுவி பார்த்தேன்.

 பிளே ஸ்டோரில் description ஆக அவர் பேசி விட்டுள்ள வீடியோவில் அவர் கதைத்திருப்பார் அதனை பார்த்தவுடனே எனக்கு சில விடயங்கள் பட்டது. பத்தாம் தர மாணவன் என்ற வகையில் இந்த app generating தளங்களின் சாதக பாதகங்களை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. முழுமையாக ஒரு அப்பினை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ன என்ன மென் பொருட்கள் பாவிக்க வேண்டும், front end - back end development, server side programming குறித்த அறிவு இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. உண்மையாகவே எல்லா app உம் இப்படித்தான் உருவாக்குகிறார்கள் எனக்கூட நினைத்திருக்க கூடும். இவை பத்தாம் தர மாணவன் என்ற வகையில் சாதாரண விடயம் தான். 

 ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் ஊடகங்கள் அந்த அப்பினை சரியாக பரிசீலிக்காது, அந்த துறை சார் வல்லுனர்களின் ஆலோசனையை பெறாது, அந்த செயலியை புரொமோட் பண்ணி விட்டார்கள். அந்த மாணவனை பேட்டி எடுத்த எந்த ஊடகமும் என்ன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கினார், என்ன programming language ஐ பயன்படுத்தினார், என்ன என்ன மென்பொருட்களை பாவித்தார் போன்ற துறை சார்ந்த தொழில்னுட்ப கேள்விகளையும் வினவவில்லை. இதெல்லாம் கேட்டிருந்தாலே இன்று நடைபெறும் இந்த சர்ச்சை நேற்றுடன் முடிந்திருக்கும். தங்களுடைய TRP இற்காகவும், Views இற்காகவும் என்ன என்று சரியான புரிதலே இல்லாமல் புரோமோட் பண்ணி இருக்கிறார்கள். அடுத்த நாளே சில மாற்று ஊடகங்கள் அதன் போலித்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன. 

 ஊடகங்கள் எவ்வளவு பொறுப்பாக செயல்பட வேண்டும். கண்மூடித்தனமாக எல்லா செய்திகளையும் போட்டுவிட முடியாதே. ( போலி என்று வெளிச்சம் போட்டு காட்டிய ஊடகங்கள் கூட ஊடக ஒழுக்கத்தை பின்பற்றவில்லை.. அந்த மாணவன் வேணும் என்று ஏமாற்றிவிட்டார் என்ற ரேஞ்சில செய்தி போட்டார்கள். மாணவனின் அறியாமையை சாதகமாக்கி viral content உருவாக்கி விட்டார்கள்) எல்லா ஊடகமும் தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு மாணவனை பப்பா மரத்தில் ஏற்றி அடுத்த நாளே தள்ளி விட்டு இருக்கிறார்கள். ஊடக ஒழுக்கம் என்று ஒரு விடயம் இருக்கிறது. இவர்கள் செய்த வேலையால் அந்த மாணவன் நிச்சயமாக மன உளைச்சலுக்கு ஆளாக கூடும். உண்மையில் நல்ல விடயங்களை ஊக்குவியுங்கள். ஆனால் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஊக்குவியுங்கள். அது தான் ஊடக ஒழுக்கம். 

 அத்துடன் பொது நலத்துடன் சொல்கிறேன் முடிந்த அளவு இப்படியான தளங்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஆப்களில் இருந்து விலகி இருங்கள். இதனுள் கொடிய வைரசுகள் கூட சாதரணமாக உலாவ கூடும். ( அந்த அப்பினை உருவாக்கும் படிமுறைகளை படங்களாக இணைத்துள்ளேன் பார்த்து தெளிவு பெறவும்) பிற்குறிப்பு: பாடசாலை அரசியலை வைத்து உருட்டுபவர்கள் ஓரமாக சென்று விளையாடவும். இது அறிவுக்காக எழுதிய பதிவு மட்டுமே. 

வோல்ட்டா ஜெபபிரசாந்த் 
கணனி விஞ்ஞான பீடம் 
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்.








யாழ் இந்து மாணவன் வாட்ஸ் அப்பிற்கு இணையாக உருவாக்கிய செயலி தொடர்பாக Reviewed by Author on July 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.