அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா மின் தகன மயானம் பழுது;சடலங்கள் தேங்கும் அவலம்

வவுனியா, முல்லைத்தீவு,மன்னார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரியூட்டும் ஒரேயொரு எரிவாயு மயானமாகக் காணப்பட்ட வவுனியா பூந்தோட்டம் மயானம் பழுதடைந்துள்ளமையால் சடலங்கள் எரியூட்டப்படாமல் தேங்கும் நிலை காணப்படுவதாக வவுனியா நகர சபைத் தலைவர் தேசபந்து இ. கௌதமன் தெரிவித்தார். வவுனியாவிலுள்ள எரிவாயு மயானம் பழுதடைந்துள்ளமை தொடர்பில் அவரிடம் கேட்ட போது இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் கொரோனா மரணங்கள் அதிகரித்த நிலையில் உள்ளன. இந் நிலையில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமே எரிவாயு மயானங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனாவால் உயிரிழப் போரின் உடல்கள் வவுனியா மயானத்திலேயே எரியூட்டப்பட்டுகின்றன.

 தற்போதைய நிலையில் அதிகளவான மரணங்களால் எமது மயானம் 24 மணித்தியாலங் களும் இயங்கும் மயானமாக செயற்பட்டு வருகின்றது. இதனால் நாம் பாரிய சவால்களையும் சிரமங்களையும் எதிர்கொள்கின்றோம். எனினும் எமது மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் உள்ளது. 

எனினும் அதிகளவான சடலங்களால் எமது மயானத்தின் தன்மை மற்றும் வினைத்திறன் குறைந்து செல்கின்றது. நேற்று முன்தினம் மாத்திரம் 11 சடலங்களை எரியூட்டியிருந்தோம். காலை 8 மணியிலிருந்து மறு நாள் அதிகாலை 4 மணிவரையும் சடலங்கள் எரிக்கப்பட்டன. இதற்கும் மேலதிகமாக நேரப்பற்றாக்குறையால் வவுனியா வைத்தியசாலையில் இன்னும் சடலங்கள் எரியூட்டப்படாமல் உள்ளன. இந்த மயானம் நேற்றுகாலை செயலிழந்துள்ளது.

 எனினும் இதனை மீள இயக்குவதற்கான முயற்சியை எடுத்து வருகின்றோம். அதனை பழுதுபார்க்கக் கூடியவர்கள் எவரும் வவுனியா வில் இன்மையால் கொழும்பில் இருந்தே வர வேண்டியுள்ளது. ஒருநாள் எமது மயானம் இயங்காது விடும் பட்சத்தில் சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகின்றது. எனவே அரசாங்கம் இவ்வாறான அனர்த்த நிலைமையில் தங்களால் செய்யக் கூடிய உதவிகளை உடன் செய்யுமாறு வேண்டுகின்றோம்” என்றார்.

வவுனியா மின் தகன மயானம் பழுது;சடலங்கள் தேங்கும் அவலம் Reviewed by Author on August 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.