அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்ட செயலக கணக்காளர் த.றாஜீவன் அவர்களுக்கு இடமாற்றம்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றிய த.றாஜீவன் அவர்கள் இலங்கை கணக்காளர் சேவை அலுவலர்களின் இடமாற்றத்தின் கீழ் வடமாகாண சபைக்கு கணக்காளராக இடமாற்றம் பெற்றுச் செல்கிறார். இலங்கை கணக்காளர் சேவையின் மூன்றாம் தரத்தை சேர்ந்த த.றஜீவன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஏழரை வருடங்களாக அர்ப்பணிப்புடனான சேவையினை மாவட்ட மக்களுக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இவர் 2014.02.17இல் இலங்கை கணக்காளர் சேவையில் தேர்வாகி மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் கணக்காளராக முதல் நியமனத்தைப் பெற்று இலங்கை கணக்காளர் சேவையில் கால்பதித்தார். அதனைத் தொடர்ந்து 2016இல் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கும், 2017இல் வெலிஓயா பிரதேசசெயலகத்திற்கும், 2019 இல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கும் இடமாற்றம் பெற்று கணக்காளராக கடமையாற்றியுள்ளார். 

மேலும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய குறித்த காலப்பகுதியில் மாவட்ட செயலக உற்பத்தி திறன் பிரிவின் இணைப்பாளராகவும் செயற்பட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகமாணி மற்றும் முதுநிர்வாக வியாபாரமாணி ஆகிய பட்டப்படிப்புக்களை பூர்த்திசெய்துள்ள இவர் அங்கு உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(21) வடமாகாண சபையில் கணக்காளராக உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ள த.ராஜீவன் அவர்களிற்கு மாவட்ட அரசாங்க அதிபர், ஊழியர் நலன்புரி சங்கம் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் சேவைநலன் பாராட்டி நன்றி நவிழ்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக கணக்காளர் த.றாஜீவன் அவர்களுக்கு இடமாற்றம்! Reviewed by Author on September 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.