அண்மைய செய்திகள்

recent
-

இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா???

இணுவிலைச் சேர்ந்த கௌரீசன் சிவதேவி(சாந்தி) தம்பதியினரின் புதல்வியாகிய தர்சிகா கடந்த 2020 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்து வரும் நன்குபழகியவருமான விவேகானந்தன் (கிளி) கேசவன் என்பவரை மன நிறைவுடன் மனைவியாக ஏற்று திருமண பந்தலில் ஈடுபட்டார். திருமண வாழ்க்கை என்னவோ மகிழ்வுடனே ஆரம்பித்தது. எனினும் காலஞ் செல்லச் செல்ல இணுவில் மாப்பிள்ளை கேட்பார் பேச்சுக் கேட்டு சொத்துக்களின் மேல் காதல் கொண்டார். கைபிடித்த கணவனுக்கு கொக்குவில் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் சொந்த வீடும் 20பவுன் நகையும் ரூ.7 இலட்சம் வரதட்சணையும் வழங்கி இன்புடன் வாழ்கையை ஆரம்பித்தாள் அப்பாவி தர்சிகா. 

இவ்வளவு பெற்றும் நாளாந்தம் சொத்தாசை மாப்பிள்ளைக்கு மேலும் மேலும் வளர்ந்தது. கால காலத்தில் தன் மனைவிக்கு சிசு பாக்கியத்தையும் அளித்த மாப்பிள்ளை தன் மனைவிக்கு விசரி என்றும் வருத்தக்காரி என்றும் பட்டஞ்சூட்டி கௌரவித்தார். மேலும் "உனக்கு பிறந்ததில் இருந்து வருத்தம்" என்றும் "நான் சொத்துக்காக தான் வந்தேன் , இருக்கிற வீட்டை தந்திட்டு போ... இல்லாட்டி எல்லாவற்றையும் உரிந்து விட்டு விடுவேன்" என தினம் தினம் புது மாப்பிள்ளையும் தந்தை கிளியும் தர்சிகாவை நச்சரித்து வந்தனர். 

 நாளாந்தம் அடிகளையும் ஏச்சுக்களையும் நச்சரிப்புக்களையும் சலித்தவாறு தன் தாயிடம் நடந்தவற்றை புலம்பினாள் தர்சிகா. சமாதானம் செய்ய வந்த மாமியாரையும் கண்ட வார்த்தைகளால் திட்டியும் தாக்கவும் வந்தார் மாப்பிள்ளை கேசவன். ஒருவாறு மாமன் மாரின் சமாதான பேச்சு வார்த்தைகளினால் மீண்டும் இணைந்து வாழ்ந்து வந்தனர் தர்சிகாவும் கேசவனும். காலங்கள் சில கழிய அழகிய குழந்தைக்கு தாயானாள் எமது புதல்வி தர்சிகா. தன் குழந்தை பெற்ற மகள் தர்சியையும் பேரனையும் அரவணைப்புடன் சில காலம் பராமரிக்க முனைந்த மாமியாரை பார்க்க விடாமல் தடுத்து திட்டியதுடன் மிரட்டல் வார்த்தைகளால் தாக்கி வீட்டிற்கு வர விடாமல் அச்சுறுத்தினார் மாப்பிள்ளை கேசவன். 

 குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன் புது மாப்பிள்ளைக்கு அரசாங்க உத்தியோகமும் கிடைத்து விட்டது என்பதால் இரண்டாம் சீதனமும் தேவைப்பட்டது. எனவே நாளாந்தம் தர்சிகா குடும்பத்தினருக்கு மேலும் பொருள் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். தர்சிகாவிற்கு ஆசைக் கதைகள் கூறி அவளை வசப்படுத்தி மேலும் சொத்து கேட்டுள்ளார். ஒருவாறு மகளை தேற்றி மருமகனையும் தேற்றி ஒன்றாக வாழ வைத்தாலும் தன் மாமியாரையோ மாமனாரையோ சகோதரனையோ தன் வீட்டிற்குள் சேர்க்க வில்லை இந்த மாப்பிள்ளை. சேர்ந்தால் தான் தன் மனைவியை எவ்வாறு நடத்துகிறான் என தெரிந்து விடுவார்கள் என்பதனால் ஆகும். 

 கிட்ட தட்ட 1மாதத்திற்கு முன்னர் தர்சிகா தன் கணவர் வீட்டில் சுகவீனமுற்று இருப்பதை கேள்வியுற்ற தாய் ஓடிச் சென்று பார்த்தார். அங்கு தனது மகள் வயிறு வீங்கிய நிலையில் அயல் வீட்டில் வசித்த வைத்தியரிடம் தற்காலிக சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் என்ன நடந்ததோ தெரியவில்லை. அவரது நிலையை பார்த்த தர்சிகாவின் தாய் வேதனை அடைந்து தர்சிகாவை வேறொரு வைத்தியரிடம் அழைத்துச் சென்று காட்டினர். அங்கு தர்சிகாவை வைத்தியசாலையில் அனுமதிக்கும் படி அறிவுறுத்தப்பட்டமைக்கு இணங்க தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அங்கும் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். 

 அங்கு தான் தர்சிகா குடல் சுருங்கி மலம் தேக்கமடைந்து வெளியேறாமல் இருந்தமை தெரியவந்தது. எனவே தாயிற்கு அது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு 7மணித்தியால சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளது. ஓரிரு நாட்களில் ICU ற்கு மாற்றப்பட்ட பின்னர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். பாதிக்கப்பட்டமை தெரிந்தும் மாப்பிள்ளையோ/ மாப்பிள்ளை வீட்டாரோ தர்சிகாவை எட்டி பார்க்கவில்லை. இந்நிலையில் கடந்த ஞாயிறு (12.09.2021) அன்று இரவு 10.30 மணியளவில் எமது சகோதரி தர்சிகா மேல் உலகம் புகுந்தார். இவரது இறுதிக் கிரியைகளுக்கு மாப்பிள்ளை/மாப்பிள்ளை வீட்டாரோ சமூகமளிக்கவில்லை. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை இறைஞ்சுகின்றோம்



இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா??? Reviewed by Author on September 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.