அண்மைய செய்திகள்

recent
-

வரலாறுகளை தளர்த்துமா? ஒரேநாடு ஒரே சட்டம்

இலங்கையில் அண்மைக்காலத்தில் பேசுபொருளாக மாறியுள்ள விடயம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதாகும். இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பலரும் பலவாறு தமது கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இதனைப் பற்றி அலசி ஆராய்கிறது இன்றைய நிகழ்ச்சி;. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த அக்டோபர் 26ம் தேதி விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டார். 

இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதுடன்ரூபவ் அதில் 13 உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் இக் குழுவின் தலைவராக கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளராக கடைமையாற்றும். 

கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஓர் இனவாத செயற்பாட்டில் ரூடவ்டுபடுபவர் என்பதே இலங்கையிலுள்ள பெரும்பாலானோரது கருத்தாக காணப்படுகின்றது. 2017ம் ஆண்டு போலீஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். 

மேலும் அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுரூபவ் ஆறு வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும்ரூபவ் 2019ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்,பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இவ்வாறான ஒருவர் 'ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான' ஜனாதிபதி செயலணியின் தவைராக நியமிக்கப்பட்டுள்ளமை, பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில் ஆரம்பத்தில் 9 சிங்களவர்களும்,4 முஸ்லிம்களும் இந்த செயலணியில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

 எனினும்,இந்த செயலணியில் ஒரு தமிழர் கூட இடம்பிடிக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது இவ்வாறான சர்ச்சை வலுப்பெற்ற நிலையில், ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படாமை குறித்து தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி,இதன்போது செந்தில் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆலோசனை வழங்கியிருந்தார். இவ்வாறான பின்னணியில், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்டது. 

இந்த வர்த்தமானி அறிவித்தலில் மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன்,யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் இந்த செயலணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவின் கையெழுத்துடன்,இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஏற்கனவே இந்த செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்த இருவர்,பதவி விலகியுள்ளனர். பேராசிரியர் தயானந்த பண்டா மற்றும் விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப் ஆகியோர் பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார். இதன்படி,திருத்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி, 14 உறுப்பினர்கள் இதில் இடம்பிடித்துள்ளனர். 

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் 8 சிங்களவர்கள்ரூபவ் மூன்று முஸ்லிம்கள் மற்றும் மூன்று தமிழர்கள் இடம்பிடித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. தற்போதய நிலையில் இதன் நிர்வாக உறுப்பினர்களாக கலகொடஅத்தே ஞானசார தேரர் (தலைவர்), பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் ஷாந்தினந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்தன, என்.ஜி.சுஜீவ பண்டித்தரத்ன, சட்டத்தரணி இரேஷ் சேனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்ஜய மாரபே, எரந்த நவரத்ன, பானி வௌல,மௌலவி மொஹமட் (காலி உலமா சபை), மொஹமட் இன்திகாப்,கலீல் ரஹுமான், அயிஸ் நிஷார்தீன்,ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 இதேவேளை,இலங்கையில் இந்த செயலணியின் ஊடாக பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்ட நிலையில்ரூபவ் தற்போது பெண் உறுப்பினர் ஒருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்பட்ட,யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வரான யோகேஸ்வரி பற்குணராஜா,இந்த செயலணியில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு பெண் உறுப்பினராவார். இந்த செயலணியின் ஊடாக அனைத்து சமூக பெண்களையும் யோகேஸ்வரி பற்குணராஜா பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 

இதேவேளை,இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை,கிழக்கு மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஐயம்பிள்ளை தயானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பதில் நீதவானாக கடமையாற்றும் ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இனங்களும் மதங்களும் இணைந்து வாழும் இலங்கை நாட்டில் தற்போது அவரவர் பண்பாடு மற்றும் பாரம்பரியங்களுக்கு ஏற்ப ,றோம டச்சுச் சட்டம்,ஆங்கிலச் சட்டம்,கண்டியச் சட்டம்,தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம் என பல சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில் இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி குறித்து பலரும் ஆதரவாகவும் எதிராகவும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வெளிப்படுத்திய நிலையில் மூவிpன தலைவர்கள் மத்தியிலும் இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறி வருகிறது. தமிழ் தலைமைகளின் நிலைப்பாட்டை பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணியின் உருவாக்கம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க என்றும். இந்த குழுவை வழிநடத்த ஒரு குற்றவாளியை நியமித்தது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் குழுவை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் என தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்ரூபவ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் கடந்த 28 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது தெரிவித்தார்.

 ஒரு நாடு ஒரு சட்டம் : திருடனை பிடித்து விதானை வேலை கொடுப்பதுபோல என்கிறார் சிறீநேசன் இவ்வாறான கருத்துக்கள் தமிழரிடையே எழுந்துள்ள நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை சேர்ந்தோரும் இதனை இதனை எதிர்த்தும் ஆதரித்தும் வருகின்றனர். ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக பிரதமரிடத்தில் சபையில் கேள்விகளை தொடுத்தார். 

அனுரகுமாரவின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது பிரதமரும்ரூபவ் சபை முதல்வரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் தடுமாரியதுடன் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காது சென்றனர். ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியானது, கேலிக்கூத்தான செயலணி என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசதலைவர் நடைமுறைப்படுத்தும் சில வேலைத்திட்டங்கள் அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் எதிர்பார்த்தவை அல்ல என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். தன்னை குறிப்பிட்ட செயலணிக்கு நியமித்திருப்பது குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கொழும்புமாநகரசபையின் உறுப்பினர் கலீல் ரஹ்மான் ஊடகங்கள் மூலமாகவே அது தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

முஸ்லீம் தலைவர்களின் நிலைப்பாட்டை பொறுத்தவரை ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது கோரிக்கை விடுத்தார். ஒரு நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியால் பிரதமரும் நெருக்கடியில் என - சபையில் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மதங்களின் நிலைப்பாட்டை நோக்கும் போது 'ஒரே நாடு – ஒரே சட்டம்' என்ற தலைப்பில் அரச தலைவர் செயலணியின் உறுப்பினர்களை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து,அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.புதிய சட்ட உருவாக்கம் குறித்து சட்டத்தரணிகளின் நிலைப்பாட்டை நோக்கும் போது. சட்டத்தரணி லயனல் பெரேரா, சட்டத்தரணி ஹேரத்ரூபவ் சட்டத்தரணி சம்பிகா த சில்வா, சட்டத்தரணி பவானி பொன்சேகா,சட்டத்தரணி சம்முகம் சிதம்பரம் ஆகியோர் இந்த சட்டங்களை ஆதரித்துள்ளனர். இருந்த போதிலும் சட்டமற்ற ஒருவரை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியான ஒருவரை இந்த குழுவிற்கு இணைக்க வேண்டாம் என சட்டத்தரணி ஹரித்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

சட்டத்தரணி ஜீவனி காரியவசம்,கூறுகையில் 'இருக்கின்ற சட்டங்களை இன்னும் மேம்படுத்துவதே சிறந்தது. ஆனால் இவ் வசனத்திற்கு உள்ளால் அரசியல் அர்த்தம் உட்பொதிந்துள்ளது. அவ்வர்த்தம் மிகவும் இனவாதத்தன்மை மிக்கது. அதாவது,இனவாதக் கோணத்திலேயே இக்கருத்து முன்வைக்கப்படுகின்றது'. இவ்வாறு பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி ஊடக மையத்தின் நோக்கத்தை நோக்கும் போது எந்தவொரு குடிமகனும்,இனம்ரூபவ் மதம்,சாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கோ அல்லது வேறு விடயங்களிலோ பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது என்று வெளியிட்டுள்ளளர். 

ஒரே நாடு,ஒரே சட்டம்ரூபவ் ஒரே கொடி,ஒரே பெயர் என இலங்கையை தனிச் சிங்கள தேசமாக அறிவிக்கும் செயற்பாடுகள் இன்று நேற்றல்ல இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதலே தொடங்கிவிட்ட ஒன்றுதான் ஆகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தமிழர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததன் காரணமாக இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தனிச் சிங்கள தேசியவாதத்தை சிங்கள ஆட்சியாளர்களால் முழுமையாக அமுல்படுத்த முடியாது போனது. அண்மையில் பாராளுமன்றத்தில் குற்றவியல் சட்டங்களைத் திருத்துவது தொடர்பான விவாதம் இடம் பெற்ற போது, நாட்டின் நீதித்துறை மீதான ஆழ்ந்த அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் முன்வைத்திருந்தனர். ரணில் - மைத்திரி கூட்டு அரசாங்கம் பலவீனமான ஒரு அரசாங்கமாக இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில்நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகமாக காணப்பட்டது.

 2018 ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக - பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராகரூபவ் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுரூபவ் இலங்கையின் நீதித்துறையின்அதிகபட்ச சுயாதீனத்தன்மையைவெளிப்படுத்தியது. 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் சுயாதீன நீதித்துறை ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் பலாபலனாக கூட, அது பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர்,சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்துமே,வெறும் அதிகாரமற்ற பெயரளவிலான அமைப்புகளாக மாறி விட்டன. இவ்வாறான நிலையில்ரூபவ் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை நாளுக்கு நாள் தேயத் தொடங்கியிருக்கிறது.

 ஜனாதிபதி ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீதித்துறையின் அதிகாரம் குறைந்து கெல்வதை காண முடிகிறது. ஒரு நாடு ஒரே சட்டம் என்பதை வலியுறுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம்,பல்வேறு விடயங்களில் வெவ்வேறு நீதியை கடைப்பிடிக்கின்ற நிலையை தெளிவாக உணர முடிகிறது. எனவே எது எப்படி இருந்தாலும் எந்த இனத்தையும் மதத்தையும் பாதிக்காத வகையில் நாட்டின் சட்டங்கள் அமைதல் ஒளிமயமான நாட்டிற்கு வழிவகுக்கும்.

E. Jeevitha
Media Studies
Final year, 
University of jaffna 






வரலாறுகளை தளர்த்துமா? ஒரேநாடு ஒரே சட்டம் Reviewed by Author on November 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.