அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் விபத்து – 26 பேர் காயம்!

திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 இதன்போது 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



திருகோணமலையில் விபத்து – 26 பேர் காயம்! Reviewed by Author on December 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.