அண்மைய செய்திகள்

recent
-

66 மில்லியன் ஆண்டுகள் உடையாமல் கச்சிதமாக புதைந்திருந்த டைனோசர் கரு முட்டை

சுமார் 66 மில்லியன் பழமைவாய்ந்த முழுமையாக விருத்தியடைந்த டைனோசர் கருவின் கண்டுபிடிப்பு தொடர்பான அறிவிப்பை விஞ்ஞானிகள் வௌியிட்டுள்ளனர். முட்டையிலிருந்து குஞ்சு பொறிந்து வெளியே வர தயாரான நிலையில் இந்த கரு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். டைனோசர் முட்டைக்கரு கச்சிதமாக உடையாமல் புதைந்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தென் சீனாவில் உள்ள Ganzhou எனும் இடத்தில் இருந்து இது மீட்கப்பட்டுள்ளது. அக்கரு பல் இல்லாத தெரொபாட் டைனோசர் (theropod dinosaur) அல்லது ஓவிரப்டொரொசராக (oviraptorosaur) இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதற்கு பேபி யிங்லியாங் (Baby Yingliang) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 ஓவிரப்டொரொசர் என்றால் முட்டைகளைத் திருடும் பல்லிகள் என்று பொருள். தற்போது ஆசியா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில், 100 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இறக்கைகள் கொண்ட இந்த டைனோசர்கள் இருந்தன. பேபி யிங்லியாங் தலை முதல் வால் வரை 10.6 அங்குல நீளம் கொண்டதாக உள்ளது. அந்த உயிரினம் 6.7 அங்குல நீள முட்டையில், சீனாவில் உள்ள யிங்லியாங் ஸ்டோன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த முட்டை முதன்முதலில் 2,000ஆம் ஆண்டு வெளிக்கொணரப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, பழைய புதைபடிமங்கள் பிரித்து வைக்கப்பட்டன. அப்போதுதான் இந்த முட்டை குஞ்சு பொறிக்கும் நிலையில் கருவோடு இருக்குமோ என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் இந்த டைனோசர் முட்டை மீது திரும்பியது.


66 மில்லியன் ஆண்டுகள் உடையாமல் கச்சிதமாக புதைந்திருந்த டைனோசர் கரு முட்டை Reviewed by Author on December 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.