அண்மைய செய்திகள்

recent
-

விடத்தல்தீவு உதைபந்தாட்ட பயிற்சி கூடம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் Royal FC அணியினர் 3 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.

விடத்தல்தீவு உதைபந்தாட்ட பயிற்சி கூட இயக்குனர் வைத்தியகலாநிதி மதுர நாயகத்தின் தலைமையில் அவரது நிதி பங்களிப்புடன் முகாமையாளர் நதன்ராஜ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடாத்தப்பட்ட ViFA Premier League - 2022 உதைபந்தாட்ட போட்டியில் 12 அணிகள் பங்கு பெற்றன. இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உதவித் தலைவரும் மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான டுல்ஷான் நாகஷவத்த , சிறப்பு விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் உதவித் தலைவரும் வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான இம்மானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் விருந்தினர்களாக அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஷ்மன் , விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் , விடத்தல்தீவு புனித ஜோசப் வாஸ் பாடசாலை அதிபர் . கியோமர் பயஸ், ஆகியோர் கலந்து கொண்டனர். 

 இறுதிப் போட்டியானது Royal FC அணிக்கும் Heritage FC அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதன் போது இறுதிப்போட்டியில் Royal FC அணியினர் 3 : 1 என்ற கோல் அடிப்படையில் Heritage FC அணியினரை வெற்றி கொண்டு இவ்வாண்டிற்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விடத்தல்தீவு உதைபந்தாட்ட பயிற்சி கூடம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் Royal FC அணியினர் 3 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. Reviewed by Author on January 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.