அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் சுற்றுநிருபம் வௌியீடு

ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நிவர்த்திசெய்து பொது நிர்வாக அமைச்சினால் சுற்றுநிருபம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி மற்றும் இந்த வருடத்தின் ஜனவரி 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கிணங்க இந்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறையாகும் வகையில் சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

 இதனிடையே, 2020 ஆம் ஆண்டில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்குவதற்கு பொதுநிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 51,682 பயிலுனர் பட்டதாரிகளுக்கு இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் ஒரு வருட பயிற்சியை நிறைவுசெய்த பட்டதாரிகளுக்கு ஜனவரி 03ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு வருட பயிற்சியை நிறைவுசெய்யாத பட்டதாரிகளுக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் சுற்றுநிருபம் வௌியீடு Reviewed by Author on January 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.