அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கழுதைகள் மன்னாரில் அழியும் தருவாயில்

 மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் அதிகளவாக அருவருக்கப்படும் விலங்காகவும் அவமதிக்கப்படும் விலங்காகவும் காணப்படுவது கழுதைகள் ஆகும் ஏனைய மாவட்டங்களில் (மன்னார் கழுதைகள்) என மன்னார் மாவட்டைத்தை அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரசித்தி பெற்றது

 கழுதைகள் மன்னாரில் உள்ள பிரதான வீதிகள் உள்ளடங்களாக எல்லா இடங்களிலும் எளிதாக காணக்கூடிய விலங்கு கழுதைகள் வீதிகளில் மனிதர்களால் வீசப்படும் பொலித்தீன்களையும் குப்பைகளையும் உண்டு வாழும் இவ் விலங்கின் பொருளாதார மதிப்பு மன்னார் மக்களுக்கு புரியாமல் போனது கவலையே கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. 

கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் ஏனைய விலங்குகளை விட அதிகமாகும் எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டன இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 100 சென்றி மீற்றர் முதல் 142 சென்றி மீற்றர் உயரம் வரை வளரக்கூடியது ஆனாலும் வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 90-இல் இருந்து 142 செ.மீ உயரம் வரை வளர்கின்றன பொதுவாக கழுதைகள் மிதமான பாலைநிலங்கள் மற்றும் வறண்ட வெப்பம் நிறந்த பகுதிகளில் வாழக்கூடியவை அதை விட இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன 

பல நாடுகளில் தற்போதுவரை கழுதைகளை பயன்படுத்தி கட்டிட வேலைகள்,போக்குவரத்து,என பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இன்னும் சில நாடுகளில் தற்போது வரை திருமணத்தின் போது கழுதைகள் சீதனமாக வளங்கப்படும் வழக்கமும் காணப்படுகின்றது பண்டைய கால மத சடங்குகளுக்கும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டதுடன் பண்டைய எகிப்தின் பெண் ஆட்சியாளரான கிளியோபட்ரா தனது அழகை பராமரிக்க கழுதைப்பாலில் குளிப்பார் எனவும் கூறப்படுகின்றது மேலும் விலங்குகளில் கழுதை மிகவும் புத்திசாலியான விலங்காகவும் பண்டைய காலங்களில் கருதப்பட்டது 

 எல்லாவற்றையும் விட முக்கியமாக கழுதை பால் மனித பால் போன்று குறைந்த புரதமும் கொழுப்பும் காணப்படுவதுடன் லக்டோஸும் கொண்டது என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு வேளாண்மை ஸ்தாபனம் தெரிவித்துள்ளது மேலும் கழுதைபாலில்,விற்றமின் A,B-1,B-2,B-6 விற்றமின் D விற்றமின் E உள்ளது கழுதை பாலில் இருந்து தயாரிக்கப்படும் சோப்,கிறீம்,மற்றும் இதர பொருட்களுக்கு சில நாடுகளில் நல்ல சந்தை மதிப்பு உள்ளமை சிறப்பம்சம் ஆகும் அதே நேரம் கழுதைப்பால் அழகு சாதன பொருட்கள் மற்றும் மருத்துவ துறைக்கு பயன்படுத்தப்படுகின்றது எனவும் ஏனெனில் கழுதைப்பால் உடலில் காணப்படும் செல்களை குணப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது 

அதே நேரம் கழுதை பாலின் சந்தை மதிப்பு லீற்றருக்கு பன்னிரெண்டாயிரம் தொடக்கம் இருபதாயிரம் வரை இலங்கை மதிப்பில் கணிப்பிடக்கூடியதாக உள்ளது இவ்வாறான பின்னனியில் மன்னார் மாவட்டத்தில் நீண்ட நெடிய காலமாக பரவல் அடைந்திருந்த கழுதைகளின் எண்ணிக்கை அண்மை காலமாக வீழ்ச்சி அடைந்துள்ளது பராமறிப்பற்ற தன்மை விபத்துக்கள்,உணவு இன்மை,நோய்த்தாக்கம் உட்பட பல காரணக்களால் இந்த கழுதைகளின் இனம் பெருக்கம் மற்றும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது இந்த நிலையில் கழுதைகளுக்கு புணர்வாழ்வளிக்கும் முகமாகவும் அவற்றின் ஊடாக பயன் உள்ள கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்னார் ஓலைத்தொடுவாய் தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் பலரையும் கவர்ந்துள்ளது

 மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் கழுதைகளுக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அவைகளை பராமரிப்பதற்கொன மருத்துவமனை ஒன்றும் அதன் அருகில் கழுதைகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது . இவ் நிலையத்தின் ஊடாக மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளை பராமரிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதுடன் அவ்வாறான காயமடைந்த கழுதைகள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு அதனை பழக்கப்படுத்தி பயனுள்ள நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது 

 அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளுக்கும் கழுதைகள் தொடர்பான தெளிவுபடுதல் வழங்ககூடிய கற்றல் நிலையம் ஒன்றும் குறித்த நிலையத்தில் செயற்பட்டு வருகின்றது 6 விதமான இனங்களை சேர்ந்த கழுதைகள் இங்கு பராமறிக்கப்படுவதுடன் இங்கு பயிற்றுவிக்கப்பட்ட கழுதைகளை கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதும் அவதானிக்கதக்கது கழுதைகள் அதிகமாக காணப்படுவதால் என்னவோ மன்னாரில் தற்போதுவரை கழுதைகள் புறக்கணிக்கப்பட்ட விலங்காகவே வீதிகளில் காட்சி தருகின்றன அவற்றை பயனுள்ள விலங்காக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மேற்கொள்ளா விடத்து புகைப்படங்களிலே கழுதைகளை எமது எதிர்கால சந்ததியினர் காண வேண்டிய நிலை வரும் என்பதே நிதர்சனம்
                
      









வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கழுதைகள் மன்னாரில் அழியும் தருவாயில் Reviewed by Author on January 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.