அண்மைய செய்திகள்

recent
-

மாவட்ட செயலக வருட ஒன்றுகூடலும் சேவை நலன் பாராட்டு விழாவும்!

மன்னார் மாவட்டச் செயலக 2021ம் ஆண்டுக்கான வருடாந்த இறுதி ஒன்றுகூடலும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களிற்கான சேவை நலன் பாராட்டு விழாவும் கடந்த வியாழக்கிழமை (26) மாலை 3 மணியளவில் மாவட்டச் செயலக வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல் அவர்கள் பிரதம அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இதன்போது ஓய்வுநிலை உத்தியோகத்தர்கள், இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பரீட்சைகளில் சித்திபெற்ற மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள், உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் முதலானவை சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
















மாவட்ட செயலக வருட ஒன்றுகூடலும் சேவை நலன் பாராட்டு விழாவும்! Reviewed by NEWMANNAR on February 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.