அண்மைய செய்திகள்

recent
-

கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட சல்லியர்கள் டீசர்...எப்படி இருக்கு ?

சல்லியர்கள் படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து இன்று வெளியிட்டுள்ளார். தமிழர்களின் போர் சார்ந்த விஷயங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதால் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போர்க்களத்தை மையப்படுத்தி தமிழில் வெகுசில படங்களே வெளியாகியுள்ளன.

அந்தவகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி "சல்லியர்கள்" என்கிற படம் உருவாகியுள்ளது. நடிகர் கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு தான் சல்லியர்கள் படத்தையும் இயக்கியுள்ளார். போர்க்களத்தில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவம் பற்றியும் போர்க்களத்தில் இறங்கி பணியாற்றிய மருத்துவர்கள் பற்றியும் போர்க்களத்தில் எத்தனை உயிர்களைக் காப்பாற்றினார்கள்? தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றினார்களா என்பது பற்றியும் இந்தப்படம் ரொம்பவே ஆழமாக விவரிப்பதாக உள்ளது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லன் களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கவிப்பேரரசு பாடல் வரிகள் எழுதி உள்ளார். படம் பற்றி இயக்குநர் கிட்டு கூறும்போது, "தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு புதிய லேயரை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். இதுபோன்ற கதைகள், இன்னும் சொல்லப்படாமல் இருக்கும் வலிகள் நிறைய இருக்கின்றன. 

நான் இயக்கிய "மேதகு" படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து கதைகேட்ட கருணாஸ் மறுநாளே அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஆரம்பிக்கச் சொன்னார். படத்தில் முக்கால் மணி நேரம் ஒரு முக்கிய பகுதியில் காட்சிகள் நடைபெறும். அப்படி ஒரு களத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். செட் போட்டு படமாக்கினால் அதில் செயற்கைத்தன்மை அப்பட்டமாக வெளியில் தெரியும் என்பதால், இந்த மருத்துவமனை காட்சிகள் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிஜமாகவே மண்ணுக்கு கீழே பதுங்கு குழி தோண்டி அதில் மருத்துவ முகாம் அமைக்கவேண்டும் என்பதில் கலை இயக்குநர் முஜிபூர் ரஹ்மான் உறுதியாக இருந்தார். அப்படி அமைக்கப்பட்ட மருத்துவமனைக்குள் தான் முக்கால் மணி நேர காட்சிகளைப் படமாக்கினோம். போர்க்களம் மற்றும் பதுங்கு குழி காட்சிகளை சிவகங்கை பகுதியில் படமாக்கினோம்

கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட சல்லியர்கள் டீசர்...எப்படி இருக்கு ? Reviewed by Author on February 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.