அண்மைய செய்திகள்

recent
-

இந்தப் படத்தில் இருந்தும் எனது கருத்துகள் மற்றும் சிந்தனை மாறுபடுகின்றது -Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

 வீடுகளுக்குள் அதிலும் சமைப்பதற்கும் துவைப்பதற்கும் இயந்திரங்கள் வந்ததாலேயே பெண்கள் உடல் பருமனாகிறார்கள் என்பது

பொதுவாக அனைத்து சமூக ஊடகங்களிலும் பரவிக்கிடக்கும் செய்தி.
ஆனால் உண்மை அதுவன்று.
இவ்வாறாக பரப்பப்படும் செய்திகள் மறைமுகமாக பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பது போன்றே எனக்குத் தோன்றுகின்றன
இந்த படங்கள் கூற வருவது என்ன?
மீண்டும் பெண்கள் மிக்சிக்கு பதிலாக அம்மியில் அரைக்க வேண்டும்.
கிரைண்டருக்கு பதிலாக உலக்கையில் உரலில் குத்த வேண்டும்.
ஸ்டவ்வுக்கு பதிலாக ஊதாங்குலை கொண்டு விறகடுப்பில் வேலை செய்ய வேண்டும்.
பழைய படி துணிகளை கைகளில் கும்மி துவைக்க வேண்டும்.
இப்படிச்செய்தால் உடல் பருமன் இருக்காது என்று இந்த படம் கூறுகின்றது.
அல்லது
வீடுகளுக்குள் இந்த நவீன உபகரணங்கள் நுழைந்ததால் தான் பெண்கள் குண்டாகிறார்கள் என்று கூறுகின்றது
இரண்டுமே "பொய்"
இரண்டுமே தவறான கருத்துகள்
இந்தியாவில் பெண்கள் மட்டுமன்று
ஆண்களும்... ஏன்.. வளர் இளம் வயது இளைஞர் இளைஞிகளும்... இன்னும் பத்து வயதைக்கூட எட்டாத குழந்தைகளும் கூடத்தான் நாளுக்கு நாள் உடல் பெருத்து வருகின்றனர்
இதற்கான உண்மையான காரணம்
நமது மாறி வரும் உணவுப்பழக்கம்
மாவுச்சத்து மற்றும் இனிப்பு அடங்கிய உணவுகளை வரைமுறை இன்றி சாப்பிட்டு வருவது தான் மெய்யான காரணம்.
கூடவே உடல் உழைப்பின்றி இருப்பது என்பது மற்றொரு காரணம்
ஆனால் உடல் பருமனுக்கு முழு முதல்காரணமே - உடல் உழைப்பின்மை தான் என்று கூறுவது தவறான வாதம்.
சமையலறைகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும்
கேஸ் ஸ்டவ்
கிரைண்டர்
மிக்சி
அவன்
வாசிங் மெசின்
போன்ற நவீன இயந்திரங்கள் நுழைந்த பிறகு தான்
பெண்களுக்கு என்றே பிரத்யேகமாக நேரம் கிடைக்கின்றது
அவர்கள் என்ன வீட்டு வேலை செய்யவே படைக்கப்பட்ட வேலைக்காரர்களா?
உடல் பருமனை குறைக்க வேண்டுமென்றால்
உணவை மாற்றி.. மாவுச்சத்தை குறைத்து
புரதச்சத்துள்ள உணவுகளை முறையாக சாப்பிட்டு
தினமும் உடல் பயிற்சிக்கு நேரம் ஒதுக்கினால் முடிந்தது.
அதை விடுத்து
மீண்டும் அம்மி , ஆட்டு உரல் என்று பேசுவது தவறு.
இது போன்ற பிற்போக்குத்தனங்களில் இருந்தும் பெண் அடிமைத்தனங்களில் இருந்து
ஆண்களாகிய நாம் விடுபட வேண்டும்.
ஒருவர் மற்றொருவரை "அடிமை செய்தல்" என்பது மனநோயாகும்.
மற்றபடி
பாலினப்பாகுபாடின்றி
வயது வித்தியாசமின்றி
அனைவருமே உணவு முறையை மாற்ற வேண்டும்.
உடல் பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை



இந்தப் படத்தில் இருந்தும் எனது கருத்துகள் மற்றும் சிந்தனை மாறுபடுகின்றது -Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை Reviewed by Author on April 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.