அண்மைய செய்திகள்

recent
-

எரியூட்டப்பட்ட பஸ் வண்டியுடன் தொடர்புபட்ட நெஞ்சை உருக்கும் கதை...

வன்முறைகள் என்றைக்கும் கொண்டாடப்பட வேண்டியவை அல்ல. மூன்று தசாப்தங்களுக்கு மேலான கொடிய யுத்தங்களினால் பெரும் சொத்தழிவையும் உயிர் சேதங்களையும் எதிர்கொண்ட மக்கள் கூட்டத்திற்கே அதன் துயரமும் வலியும் எத்தகையது என்று விளங்கும். அந்தவகையில் அண்மையில் நடந்துமுடிந்த வன்முறையில் பலசொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தனியாருக்கு சொந்தமான 45 பஸ்க்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. இங்கே கிழே வருகின்ற கதை சிங்கள மொழிமூலம் சமூகவலைத்தளம் ஒன்றில் பிரசுரமாகி இருந்தது அதன் தமிழாக்கத்தை உங்களுக்காக பதிவுசெய்கின்றேன். 

இந்தக் கதை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அந்த அதிர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல நினைத்ததால் இதை எழுதுகிறேன். இந்த சிறுவன் கொழும்பில் இருந்து சற்று தொலைவில் உள்ள வடமேல் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து கொழும்பு பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்க வந்தான். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சிறுவனுக்கு இரண்டு சகோதர சகோதரிகள் உள்ளனர் . அவனது தந்தை பஸ் ஒன்றை குத்தகைக்கு எடுத்து பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தியுள்ளார். அவரே இந்த பேருந்தின் டிரைவராக பணிபுரிந்தார். மாதக்கணக்கில் பஸ் ஓடி, வாடகை கிடைக்காத நிலையில் கொழும்புக்கு வருவதற்கு வாடகை ஒப்பந்தம் ஒன்று நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது டெம்பிள் ட்ரீஸில் ஒரு கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வது. 

 அன்றைய நிகழ்வுகளுடன், ஒரு குழு இந்த நபரின் பேருந்தைத் தாக்கி தீ வைத்தது. மூன்று குழந்தைகளுக்கும் சோறும், கல்வியும் தந்த பேருந்தை இழந்து பெரும் சோகத்துடன் கிராமத்திற்கு வந்த தந்தை சுமார் இரண்டு நாட்கள் கவலையுடன் இருந்தார், குழந்தைகளை எப்படி பாடசாலைக்கு அனுப்புவது,அவர்களுக்கு எப்படி சாப்பாடு போடுவது எனப் பெருமூச்சு விடுகிறார் மனைவி. இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் தீப்பற்றி எரிந்த பேருந்தின் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பிள்ளைகளின் அதிர்ஷ்டவசமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததை மனைவி கண்டுள்ளார். 

 இந்தக் கதையைக் கண்ணீருடன் தன் ஆசிரியரிடம் கூறுகிறான் அவரது மகன். போராட்டத்தின் அழிவுகளால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நம் சொந்தங்கள் பலருக்குள்ளும் இதுதான் கதையாக இருக்கின்றது . அவை பல அதிர்ச்சிகரமான சம்பவங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். வாழ்க்கை என்பது டிக்-டாக்-டோ அல்லது கோலிவுட் திரைப்படங்களைப் பற்றியது அல்ல. முதலில் தனக்குள் இருக்கும் மனிதனை கண்டுபிடிக்க போராட வேண்டும். மனித நேயத்தை கண்டறிய வேண்டும்

.
எரியூட்டப்பட்ட பஸ் வண்டியுடன் தொடர்புபட்ட நெஞ்சை உருக்கும் கதை... Reviewed by Author on May 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.