அண்மைய செய்திகள்

recent
-

41 லட்சம் பணமும் கொடுத்து, குடியேற இடமும் தரும் நாடு குறித்து தெரியுமா?

பரபரப்பான, இரைச்சல் மிகுந்த நகர வாழ்க்கையில் பறவைகளின் சப்தத்தை விட கார்களின் சப்தத்தைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப்போனவராக நீங்கள் இருந்தால், அழகான, அமைதியான வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள “ஸ்காட்டிஷ்” தீவுகளுக்குச் செல்ல விரும்பும் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் £50,000 ( இந்திய மதிப்பில் ரூ. 48,47,597) வழங்குகிறது. 

இது ஓர்க்னி மற்றும் ஐல் ஆஃப் ஸ்கை போன்ற நகரங்களைப் போலவே மக்கள்தொகை குறைவதைத் தடுக்கும் முயற்சியாகும். இந்த அறிவிப்பின் படி, 2026 ஆம் ஆண்டு வரை 100 நபர்களுக்கு £50,000 வழங்கப்படும். ஏற்கனவே, ”தென் அமெரிக்காவிலிருந்து பல விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன” என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இது தேசிய தீவுகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ”உலகின் மிக அழகான தீவு” என்றா பெருமைக்காக நடத்தப்படும் ஓட்டெடுப்புகளில், தொடர்ந்து வாக்களிப்பவர்களாக இருப்பதற்காக அந்த தீவில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 மேற்குத் தீவுகளுக்கான நிர்வாக அதிகாரி அலாஸ்டெய்ர் ஆலன், தி டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில்: “மக்கள்தொகை என்பது நம் போன்ற தீவு வாழ் சமூகங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். மக்கள்தொகை குறையும் பிரச்சனையைச் சமாளிக்க நாம் செய்யக்கூடிய அனைத்தும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்தப் பத்திரங்கள் மக்கள் வீடுகளை வாங்கவும், வணிகங்களைத் தொடங்கவும் தேவைப்பட்டால் நீண்ட காலத்திற்கு அவர்களின் வாழ்க்கையை இங்கேயே உருவாக்கிக் கொள்ளவும் உதவும்." என்றார். 

 மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் ஆகஸ்ட் 2, 2021 அன்று தீவுகள் பத்திரம் வழங்குதல் குறித்த ஆலோசனையைத் தொடங்கினோம், குறிப்பாக எங்கள் தீவில் வசிப்பவர்களுக்கு இருக்கிற சவால்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பாகவும் இந்த பத்திரமானது இருக்கும்". என்றார். இருப்பினும், பலர் இந்த திட்டத்தால் மகிழ்ச்சியடையவில்லை. தாராளவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லியாம் மெக்ஆர்தர் கூறுகையில், ஒட்டுமொத்த சமூகங்களுக்கும் பயனளிக்கும் நடவடிக்கைகளில் பணத்தைப் பயன்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். அவர் செய்தி நிறுவனங்களிடம் அளித்த பேட்டியில், “குறிப்பிடப்பட்ட அந்த தீவுகள் பத்திரமானது சிறுபான்மையினருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது, தீவு வாழ் சமூகங்களில் மக்கள்தொகை குறைவதற்கான மூல காரணங்களைச் சமாளிப்பதற்குப் பதிலாகப் பிளவுகளை உண்டாக்கும் ஆபத்துள்ளது” என்று எச்சரித்தார்.




41 லட்சம் பணமும் கொடுத்து, குடியேற இடமும் தரும் நாடு குறித்து தெரியுமா? Reviewed by Author on May 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.