அண்மைய செய்திகள்

recent
-

40 ஆண்டுகளின் பின்னர் பரவும் Monkeypox வைரஸ்

40 ஆண்டுகளின் பின்னர் Monkeypox வைரஸ் மீண்டும் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் Monkeypox வைரஸ் பரவி வருவதாக சர்வதேச சுகாதாரப் பிரிவுகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கடந்த மே 6ஆம் திகதி Monkeypox வைரஸூடன் ஒருவர் கண்டறியப்பட்டார் இதனையடுத்து அமெரிக்கா, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் குறித்த வைரஸூடன் பலர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 அமெரிக்காவில் Monkeypox வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட நபர் அண்மையில் கனடாவிற்கு சென்று திரும்பியவர் என குறிப்பிடப்படுகிறது. 40 வருடங்களின் பின்னர் வைரஸ் பரவியுள்ளதாகவும் இதற்கு இதுவரையில் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவுகள் தெரிவிக்கின்றன. 

 மனிதர்களுக்கு ஏற்படும் சின்ன அம்மையை ஒத்ததாக இந்த Monkeypox வைரஸ் காணப்படுவதாக கூறப்படுகிறது. காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்புளங்கள் Monkeypox வைரஸூக்கான அறிகுறிகளாக காணப்படுவதுடன், இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானால் பிரத்தியேக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வேண்டியது கட்டாயமாகும். சமூகத்தில் இந்த தொற்று பரவாமல் தடுக்க தொற்றுக்குள்ளானவரை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டில் ஆய்வுகளுக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளில் முதலாவதாக கண்டறியப்பட்ட Monkeypox வைரஸ் 1970 ஆம் ஆண்டு கொங்கோ நாட்டில் மனிதரிடையே கண்டறியப்பட்டது.


40 ஆண்டுகளின் பின்னர் பரவும் Monkeypox வைரஸ் Reviewed by Author on May 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.