அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் முழுமைப்படுத்தப்படாத வீதி ,தூசியாலும் நோயாலும் பாதிக்கப்படும் குழந்தைகள்

மன்னார் செளத்பார் ரெலிக்கோம் பிரதான வீதி அமைக்கப்பட்டு முழுமைப்படுத்தப்படாத நிலையில் நீண்ட நாட்களாக தூசியாலும் நோயாலும் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபார நிலையங்கள் நாடத்திவரும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குறித்த வீது அமைப்பதற்கு என ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சல்லிகற்கல் மற்றும் சீமேந்து கலந்த மண் என பரப்பபட்ட நிலையில் வீதி அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் குறித்த பகுதியில் வாகனங்கள் பயனிக்க முடியாத நிலை காணப்படுவதுடன் வாகனங்கள் பயணிக்கும் போது பாரிய அளவு தூசி துணிக்கைகள் பறப்பதாகவும் இதனால் சுவாச பிரச்சினைகள் மற்று ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் சிறு குழந்தைகளும் தொடர்சியாக பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் 

 குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல்,மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் உட்பட அரச அதிகாரிகளிடம் பல முறை தெரியப்படுத்தியும் குறித்த வீதி அமைக்கும் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் 

 அதே நேரம் குறித்த பிரச்சினையை சம்மந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பதிகாரியிடம் கொண்டு சென்ற நிலையில் “வெளியே போ என அவ மரியாதையாக நடந்து கொள்வதாகவும் முறைப்பாடு மேற்கொள்ள சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்” அதே நேரம் பொலிஸாரும் முறைப்படு ஏற்கொள்ள மறுப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே விரைவில் அவ் வீதியை பூரணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லா விட்டால் அப்பகுதியில் வீதி தடைகளை ஏற்படுத்தி வாகனங்களை மறித்து போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

            
மன்னாரில் முழுமைப்படுத்தப்படாத வீதி ,தூசியாலும் நோயாலும் பாதிக்கப்படும் குழந்தைகள் Reviewed by Author on May 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.