அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெற்ற திட்டமிடல் கருத்தமர்வு

மன்னார் மறைமாவட்ட கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் செயற்பாட்டு பிரிவுகளில் ஒன்றாகிய கிராமிய ரீதியாக மக்களை வலுவூட்டும் செயற்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (20) மன்னார் வாழ்வுதய கேட்போர் கூடத்தில் கிராம மட்ட பெண் தலைவர்களுக்கு மேற்படி விடயம் தொடர்பான கருத்தமர்வானது இடம் பெற்றது. கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளாரின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்ற கருத்தமர்வினை கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் உதவி இயக்குனர் அருட்பணி அருண் தாஸ் அடிகளார் ஆரம்பித்து வைத்தார். 

 இக்கருத்தமர்விற்கு வியாபார திட்டமிடல் ஆலோசகா ஜெயமலர் வளவாளராக கலந்து கொண்டார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு இலக்கு கிராமங்களிலிருந்து 52 கிராமிய மட்ட பெண் தலைவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் குறிப்பாக சமகாலத்தில் எமது நாட்டில் புரையோடிப் போயுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் அனாவசியமான செலவீனங்களை எவ்வாறு குறைக்க முடியும் என்பது தொடர்பாகவும், தமது கிராமிய வளத்தை பயன்படுத்தி குடும்பமாக இணைந்து பொருளாதார ரீதியில் திட்டமிட்டு தமது குடும்ப அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகளை உட்புகுத்தி இக் கருத்தமர்வு நடாத்தப்பட்டது. இக்கருத்தமர்வு சம காலத்திற்கு பொருத்தப்பாடாக அமைந்துள்ளதுடன் இதில் பங்கேற்ற பெண்கள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம் பெற்ற திட்டமிடல் கருத்தமர்வு Reviewed by Author on May 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.