அண்மைய செய்திகள்

recent
-

30 வருடங்களின் பின்னர் தொடரை கைப்பற்றியது இலங்கை..!

30 வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில், அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை அணி வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டது. கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் ஷரித் அசலங்க 110 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் அதி கூடிய ஓட்டங்களாக பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி தழுவியது. 

இதன்படி, ஐந்து போட்டிகளை கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரில், மூன்று தொடர் வெற்றிகளை பெற்று, தொடரை கைப்பற்றியது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி முதல் 22ம் திகதி வரை நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றியை தன்வசப்படுத்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரில் 30 வருடங்களின் பின்னர், இலங்கை அணி மீண்டும் அவுஸ்திரேலியாவை வீழ்ச்சி, வெற்றி வாகை சூடியுள்ளது.


30 வருடங்களின் பின்னர் தொடரை கைப்பற்றியது இலங்கை..! Reviewed by Author on June 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.