அண்மைய செய்திகள்

recent
-

படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரை சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம்.

இலங்கையில் இருந்து படகு மூலம் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. -எனினும் குறித்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வருகிறது. மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன், ஆகிய வயோதிப தம்பதிகளான இருவருமே இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றனர். 

 இந்த நிலையில் குறித்த இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சையில் உள்ள இருவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டதோடு : அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். 

 இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர். இந்த நிலையில் மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன்,ஆகிய வயோதிப தம்பதிகளான இருவரும் படகு மூலம் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர். இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரை சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம். Reviewed by Author on June 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.